search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண் தர்ணா"

    • விஜயின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டதாக தெரிவித்தனர்.
    • அதிர்ச்சி அடைந்த சித்ரா தன்னை ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்க கோரி சின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு தனது வக்கீலுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் சித்ரா (வயது21). தனியார் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மார்க்கையன்கோட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வாத்து என்ற விஜய் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    கடந்த 5 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். சித்ராவை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பல்வேறு கட்டங்களாக பணம், நகையை வாங்கி உள்ளார். இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் ரூ.2 ஆயிரம் பணம் வாங்கிக்கொண்டு தேனி சென்று வருவதாக கூறிய விஜய் அதன் பின்னர் இவரை சந்திப்பதை தவிர்த்துள்ளார். செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. விஜயின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டதாக தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சித்ரா தன்னை ஏமாற்றிய காதலனை சேர்த்து வைக்க கோரி சின்னமனூர் போலீஸ் நிலையம் முன்பு தனது வக்கீல் ஜகன்ராஜூவுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

    போலீசார் அவரை சமரசம் செய்ததால் போராட்டத்தை கைவிட்டார். இது தொடர்பாக விஜய் அவரது தாய் தமிழ்ச்செல்வி, உறவினர் லதா உள்பட 5 பேர் மீதுபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாரதிராஜா அங்கிருந்து சென்றுவிட்டதால் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்வதாக கூறி போலீஸ் ஸ்டேசன் உள்ளே உட்கார வைத்துள்ளனர்.
    • போலீசார் சமரசம் செய்தும் கமலாதேவி கேட்காமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபடவே பெண் போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, கிட்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது34), இவருக்கும், இவரின் பெரியப்பா முருகன் (70), என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சொத்து தகராறு இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் இளையராஜா, முருகன் மற்றும் அவரின் மகன்கள் கோபால் உள்ளிட்டோருக்கு சொத்து சம்மந்தமாக காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

    இது சம்மந்தமாக முருகன் மற்றும் இளையராஜா இரு தரப்பிலும் விசாரித்துக் கொண்டிருந்தபோது, இளையராஜாவின் அண்ணன் பாரதிராஜா மொபைல் போனில் படம்பிடித்ததாக கூறப்படுகிறது.

    போலீசார் எதற்கு படம்பிடிக்கிறாய் என கேட்டுள்ளனர். இதையடுத்து பாரதிராஜா அங்கிருந்து சென்றுவிட்டதால் போலீசார் இளையராஜா மீது வழக்கு பதிவு செய்வதாக கூறி போலீஸ் ஸ்டேசன் உள்ளே உட்கார வைத்துள்ளனர்.

    இதை பார்த்த அவரின் மனைவி கமலாதேவி (30), கணவர் இளையராஜாவை தாக்கி போலீசார் கீழே தள்ளியதாக கூறி தனது மூன்று வயது மகள் துவாரகபிரியாவுடன் காவல் நிலையம் எதிரில், தருமபுரி–திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து அரை மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டார்.

    போலீசார் சமரசம் செய்தும் கமலாதேவி கேட்காமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபடவே பெண் போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கி காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

    அங்கு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து விசாரித்து முறைப்படி கோர்ட்டை அணுகி தீர்வு காணுங்கள் என கூறி போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • ஒருபுறம் காதல் கணவன் கைவிட்டாலும், பிறந்த வீடு தன்னை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் வந்த வைதேகிக்கு என்ன ஏமாற்றமே மிஞ்சியது.
    • காதலித்து 8 மாத காலம் இளம்பெண்ணோடு வாழ்ந்துவிட்டு உதறித் தள்ளிய இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள மங்களநாடு பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி (வயது 22). இவர் தன்னை விட 2 வயது குறைந்தவரான தொண்டைமானேந்தல் பகுதியை சேர்ந்த வல்லரசு (20) என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார். அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மணமேல்குடி கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பின்னர் பெற்றோருக்கு பயந்து, மதுரையில் 4 மாதமும், கோத்தகிரியில் 3 மாதமும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர்.

    இந்நிலையில் கோத்தகிரியில் இருந்தபோது காதல் திருமணம் கசந்து இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வல்லரசு, வைதேகியை அங்கேயே விட்டுவிட்டு தனது பெற்றோருடன் வந்து சேர்ந்துள்ளார்.

    காதல் கணவர் கைவிட்ட நிலையில், கோத்தகிரியில் தனியாக தவித்த வைதேகி பாதுகாப்பு கருதி தனது சொந்த ஊருக்கு திரும்பி பெற்றோரிடம் தன்னை சேர்த்துக்கொள்ளுமாறு கெஞ்சினார். ஆனால் தங்களை மறந்து எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட மகளை அவர்கள் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

    ஒருபுறம் காதல் கணவன் கைவிட்டாலும், பிறந்த வீடு தன்னை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் வந்த வைதேகிக்கு என்ன ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் கணவர் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து அங்கு சென்றார். ஆனால் அங்கு மாமனார், மாமியார், கணவர் உள்ளிட்டோர் வைதேகியை தாக்கி அங்கிருந்து துரத்தியுள்ளனர்.

    இதனால் செய்வதறியாமல் திகைத்த வைதேகி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த வைதேகி இறந்து விடலாம் என கருதி விஷம் அருந்தினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    அங்கு 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு தனது கணவர் வல்லரசு வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே வல்லரசு மற்றும் மாமனார், மாமியார் உள்ளிட்டோர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவுடையார்கோவில் போலீசார் வைதேகியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி காப்பகம் ஒன்றில் அவரை அனுமதித்தனர்.

    மேலும் விசாரணையை தொடங்கிய போலீசார் தலைமறைவர்களை தேடி வருகின்றனர். காதலித்து 8 மாத காலம் இளம்பெண்ணோடு வாழ்ந்துவிட்டு உதறித் தள்ளிய இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×