search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருக்கை வசதி"

    • கலெக்டர் அலுவலகத்தில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றிருந்த ஓய்வூதியர்கள் இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை.
    • போதிய வசதிகள் செய்யப்படவில்லை.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஓய்வூதியதாரர் களுக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 60 வயதிற்கும் மேற்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    காலை 10 மணிக்கு தொடங்கிய நேர்காணல் மாலை வரை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்தவர்களுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை. ஒருவருக்கு நேர்காணல் நடத்த குறைந்தது 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஆனது. இதனால் நேர்காண லுக்கு வந்திருந்த வயதான வர்கள் அலுவலகத்தின் வெளியே நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    உடல் நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக அவர்களால் நிற்க முடியவில்லை. இதனால் பலர் அங்குள்ள மரத்தடி யில் அமர்ந்திருந்ததை காண முடிந்தது. எனவே ஓய்வூதியதாரர்களின் நேர்காணலுக்கு வருவோ ருக்கு இருக்கை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தாத உரிமையாளர்கள் மீது நடவடிக்கை என தொழிலாளர் துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ். தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    முதலமைச்சரின் வழிகாட்டு தலின்படி, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டம், 2021-ன்படி, கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபு ரியும் அனைத்து தொழிலாளர்களும் பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி அச்சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்து தரப்பட வேண்டும் என்று அந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிட ப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட சட்ட திருத்தத்தை கடைப்பி டிக்காத விருதுநகர் மாவட்டத்தில் 7 நிறுவன உரிமையாளர்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அக்டோபர் மாதம் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ், கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக, விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ஆட்சி எல்லைக்கு உட்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வர்கள் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் பணியாளர்க ளுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்காத 5 கல்வி நிறுவனங்கள் மீது முரண்பாடு காணப்பட்டு மதுரை தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வில் தொழி லாளர் உதவி ஆய்வர்கள் செல்வராஜ், பாத்திமா, முருகள், துர்கா, சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    ×