search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா கிரிக்கெட்"

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் அடித்த ரிஷப் பந்த்-ன் பேட்டிங் திறமை குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளார். #TeamIndia
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது 3-வது டெஸ்டில் 20 வயது ஆன ரிஷப் பந்த் அறிமுகமானார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.

    இங்கிலாந்தில் சதம் எடுத்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனைக்குரிய ரிஷப் பந்த் குறித்து பிரசாத் கூறியதாவது:-

    இங்கிலாந்தில் கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் பேட் செய்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. உண்மையில் அவரது பேட்டிங் திறமை மீது எங்களுக்கு எந்த சந்தேகமும். எங்களுடைய ஒரே கவலை அவரது விக்கெட் கீப்பர் பணியை பற்றிதான். கீப்பர் பணியில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும்.



    ஆனால் இப்போது 3 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்து அனுபவம் பெற்றுள்ளார். இதன்மூலம் எந்த இடத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதை அவர் புரிந்து கொண்டிருப்பார். ஒரு விக்கெட் கீப்பீங் சிறப்பு பயிற்சியின் கீழ் அவரை மேம்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறோம்.



    ரிஷப் பந்த் உடன் மேலும் சில புதிய இளம் விக்கெட் கீப்பிங் திறமைகளையும் அடையாளம் கண்டுள்ளோம். இவர்களுக்கும் ஒரு விக்கெட் கீப்பிங் சிறப்புப் பயிற்சியாளரின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். ரிஷப் பந்த் இந்திய அணிக்காக நீண்ட காலம் சேவையாற்றுவார் என்றே நான் நம்புகிறேன்’’ என்றார்.
    இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சாதிக்க விராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-4 எனத் தொடரை இழந்தது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் இந்தியா வெற்றியை நெருங்கி வந்து தோல்வியடைந்தது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி 593 ரன்கள் குவித்த போதிலும், கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்படவில்லை என்று விமர்சனம் இருந்து வருகிறது. முக்கியமான கட்டத்தில் அவரால் சிறந்த முடிவை எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.



    இந்நிலையில் விராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘விராட் கோலி இன்றும் ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து தொடரில் பீல்டர்களை சரியான இடத்தில் நிற்க வைப்பது அல்லது பந்து வீச்சை சரியான நேரத்தில் மாற்றுவது ஆகியவற்றில் விராட் கோலியின் செயல்பாட்டில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதன்மூலம் அவருடைய அனுபவ குறைபாடு தெளிவாக தெரிகிறது’’ என்றார்.
    ஓவல் டெஸ்டில் சதம் அடித்த அலஸ்டைர் குக் ‘ஓவர் த்ரோ’ மூலம் ஐந்து ரன்கள் பெறுவதற்கு காரணமாக இருந்த பும்ராவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். #AlastairCook
    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனும் ஆன அலஸ்டைர் குக் இன்றுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். நேற்று இந்தியாவிற்கு எதிரான ஓவல் டெஸ்டில் தனது கடைசி இன்னிங்சை விளையாடினார்.

    ஒரு கட்டத்தில் 96 ரன்கள் அடித்திருந்தார். இன்னும் நான்கு ரன்கள் அடித்தால் சதத்துடன் விடைபெறலாம் என்ற நெருக்கடியில் குக் களத்தில் நின்றிருந்தார். அப்போது ஜடேஜா வீசிய பந்தை ஆஃப் சைடு அடித்தார். அது பும்ரா கைக்கு சென்றது. அப்போது குக் ஒரு ரன்னிற்காக மெதுவாக நடந்து வந்தார். ஏறக்குறைய க்ரீஸை நெருங்கி விட்டார்.

    அந்த சமயத்தில் மின்னல் வேகத்தில் பும்ரா ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். இதை ஜடேஜா சற்றும் எதிர்பார்க்கவில்லை. பந்து அவரை நின்றிருந்த இடத்தை விட்டு வெகு தொலையில் சென்றது. இதனால் ஓவர் த்ரோ மூலம் பந்து பவுண்டரியை அடைந்தது.

    97 ரன்னில் நின்றிருந்த குக் எந்தவித சிரமமின்றி சதம் (101) அடித்தார். நேற்றைய ஆட்ட நேரம் முடிந்த பின்னர் அலஸ்டைர் குக் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது சதம் அடிக்க வேண்டும் என்ற தலைவலியை பும்ரா குறைத்துவிட்டார். அவருக்கு நன்றி என்று தெரிவித்தார்.



    இதுகுறித்து அலஸ்டைர் குக் கூறுகையில் ‘‘நான் 97 ரன்களுக்காக ஒரு ரன் அடித்துவிட்டு வரும்போது, மேலும் மூன்று ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது. பும்ரா கைக்கு பந்து சென்றதும், அவர் கீப்பரிடம் த்ரோ செய்வார் என்று நினைத்தேன். ஆனால் பந்தை வேகமாக வீசினார். அப்போது நான் ஜடேஜாவை பார்த்தேன். அவர் பந்து செல்லும் திசைக்கு அருகில் இல்லை. அப்போது சதம் நெருங்குகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

    ஓவர் த்ரோ என்னுடைய தலைவலியை தீர்த்துவிட்டது. இந்த தொடர் முழுவதும் பும்ரா ஏராளமான தலைவலி தந்தார். தற்போது ஓவர் த்ரோ மூலம் ஒரு வாய்ப்பு தந்தார். இதற்கான நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்’’ என்றார்.
    ×