search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்ட்ராய்டு ஒன்"

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8.1 ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. #NokiaMobile #smartphone



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி நோக்கியா 8.1 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் சர்வதேச எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் முன்னதாக நோக்கியா X7 என்ற பெயரில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    நோக்கியா 7 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கும் நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:7:9 ரக பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ், சோனி IMX363 சென்சார், f/1.8, OIS, 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. சீன் டிடெக்ஷன் வசதி கொண்டிருக்கும் இந்த கேமரா புகைப்படங்களை மிக நேர்த்தியாக பிரதிபலிக்கும் திறன் கொண்டிருக்கிறது.

    செல்ஃபி எடுக்க 20 எம்.பி. கேமரா, f/2.0, 1.8μm பிக்சல், ஏ.ஐ. பியூட்டி, ஏ.ஐ. போர்டிரெயிட் மோட், 6 ஏ.ஐ. ஸ்டூடியோ லைட்கள் மற்றும் டூயல் வியூ மோட் கொண்டிருக்கிறது. 6 சீரிஸ் அலுமினியம்-மக்னீசியம் அலாய் ஃபிரேம், கிளாஸ் பேக், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 8.1 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.



    நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:

    - 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆன்ட்ராய்டு 9.0 (பை)
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS
    - 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, ZEISS ஆப்டிக்ஸ்
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், நோக்கியா OZO ஸ்டீரியோ ஆடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் புளு/சில்வர், ஸ்டீல்/காப்பர், ஐயன்/ஸ்டீல் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. நோக்கியா 8.1 சர்வதேச எடிஷன் விலை 399 யூரோக்கள் (இந்திய மதி்ப்பில் ரூ.31,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. #NokiaMobile #smartphone
    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. #MotorolaOnePower



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் பவர் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. 

    லெனோவோவின் முதல் ஆன்ட்ராய்டு ஒன் சாதனம் இந்தியாவில் ரூ.18,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

    பிளிப்கார்ட் தளத்தில் டிசம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை நடைபெற இருக்கும் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையில் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் முன்னதாக ஆகஸ்டு மாதம் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் விலை ரூ.1,000 குறைக்கப்படுவதுடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதனுடன் மாதம் ரூ.2,500 வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்தும் வாடிக்கையாளர்கள் புது மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனினை பெற்றுக் கொள்ளலாம்.



    மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.12μm பிக்சல்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.0μm பிக்சல், 4K வீடியோ
    - 12 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.25μm பிக்சல்
    - கைரேகை சென்சார்
    - P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ, டூயல் மைக்ரோபோன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 7.1 மிட்-ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #Nokia7plus



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 7.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச், ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஸ்கிரீன், நாட்ச், பியூர் டிஸ்ப்ளே தொழில்நுட்பம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. + 5 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா, ZEISS ஆப்டிக்ஸ் மற்றும் சீரான ஆட்டோஃபோக்கஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 8 எம்.பி. ஏ.ஐ. மேம்படுத்தப்பட்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமரா முக அங்கீகார தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும்.

    புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மற்றும் டூயல்-அனோடைஸ்டு டைமன்ட் கட் கலர்டு எட்ஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி, யு.எஸ்.பி. டைப்-சி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    நோக்கியா 7.1 சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் 2244x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஹெச்.டி.ஆர். 10 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.28 um பிக்சல், ZEISS ஆப்டிக்ஸ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 1.12um பிக்சல்
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 84-டிகிரி FOV
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, நோக்கியா OZO ஆடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், டைப்-சி
    - 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் கிளாஸ் மிட்நைட் புளு மற்றும் கிளாஸ் ஸ்டீல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.19,99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க முன்னணி மொபைல் விற்பனையாளர்கள் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் டிசம்பர் 7ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. 

    அறிமுக சலுகை:

    நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு 1000 4 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதை பெற பயனர்கள் ரூ.199 விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஏர்டெல் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 120 ஜி.பி. கூடுதல் டேட்டா, மூன்று மாதங்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சந்தா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் நோக்கியா 7.1 மாத தவணையில் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பைன்லேப் மூலம் பணம் செலுத்தும் போது 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    இன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. #Note5Stylus #smartphone


    இன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி நிறுவம் இந்தியாவில் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஆன்ட்ராய்டு ஒன் மாடலாக அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போனுடன் எக்ஸ் பென் ஸ்டைலஸ் வழங்கப்படுகிறது.
    இது 4096 அளவில் அழுத்தத்தை உணரும் என்றும் மிகவும் மென்மையான நுனிப் பகுதியை கொண்டுள்ளது.

    ஒற்றை கிளிக் மூலம் மெனு, புதிய மெனு ஆப்ஷன்களுக்கு சென்று பென் மற்றும் இரேசர் ஆப்ஷன்களில் ஒன்றை ஒற்றை கிளிக் மூலம் தேர்வு செய்ய முடியும். எக்ஸ் பென் மெனு மூலம் நோட்ஸ், மெமோஸ் எழுதுவதோடு, ஸ்கிரீஷாட் எடுப்பது, ஃபைல்களை பார்ப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

    புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P23 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    மெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ 18:9 ஐ.பி.எஸ். 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P23 16என்.எம். பிராசஸர்
    - 800MHz ARM மாலி G71 MP2 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி.
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட் மற்றும் சார்கோல் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை டிசம்பர் 4ம் தேதி துவங்குகிறது. 

    இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 மதிப்புள்ள உடனடி கேஷ்பேக் (வவுச்சர்கள் வடிவில்) மற்றும் 50 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சியோமி நிறுவனத்தின் Mi ஏ2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் இந்தியாவில் வெளியானது. #Xiaomi #MiA2



    சியோமி நிறுவனத்தின் Mi ஏ2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்டு மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட Mi ஏ2 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் விரைவில் வெளியிடப்படும் என சியோமி அறிவித்தது.

    அந்த வகையில் Mi ஏ2 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் மெமரி தவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    சியோமி Mi ஏ2 சிறப்பம்சங்கள்:

    – 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    – ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
    – அட்ரினோ 512 GPU
    – 6 ஜிபி ரேம்
    – 128 ஜிபி மெமரி
    – ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
    – டூயல் சிம் ஸ்லாட்
    – 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS
    – 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
    – 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
    – கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    – டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    – 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    – குவால்காம் க்விக் சார்ஜ் 4+

    சியோமி Mi ஏ2 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வேரியன்ட் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. சியோமி Mi ஏ2 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வேரியன்ட் புதிய விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Nokiamobile



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் புதிய மொபைல் போனினை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 பிராசஸர், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேரமா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    புதிய நோக்கியா 3.1 பிளஸ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டு பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    நோக்கியா 3.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1440x720 பிக்சல் HD+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
    - 650 மெகாஹெர்ட்ஸ் பவர் வி.ஆர். GE8320 GPU
    - 2 ஜி.பி., 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி., 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போன் புளு, வைட் மற்றும் பேல்டிக் நிறங்கஅளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.11,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோக்கியா போன் வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு 1000 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகை வழங்கப்படுகிறது.
    மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் மாடலாக ஒன் பவர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #MotorolaOnePower



    மோட்டோரோலா நிறுவனத்தின் ஒன் பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யதது. முன்னதாக ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா ஒன் பவர் மாடலில் 6.2 இன்ச் 19:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் மோட்டோரோலா லோகோ இடம்பெற்றுள்ளது.

    ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட் மற்றும் ஆன்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படுகிறது.

    ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனாக இருந்தாலும், இதில் மோட்டோரோலா அனுபவங்களை வழங்கும் சில அம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    மோட்டோரோலா ஒன் பவர் சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, 1.12μm பிக்சல்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.0μm பிக்சல், 4K வீடியோ
    - 12 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.0, 1.25μm பிக்சல்
    - கைரேகை சென்சார்
    - P2i வாட்டர் ரெசிஸ்டன்ட் நானோ கோட்டிங்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி ஆடியோ, டூயல் மைக்ரோபோன்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும் மோட்டோரோலா ஒன் பவர் விற்பனை அக்டோபர் 5-ம் தேதி துவங்குகிறது. இந்தியாவில் மோட்டோரோலா ஒன் பவர் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Nokia5Plus #smartphone



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தபடி இந்தியாவில் தனது புதிய ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

    நோக்கியா 5.1 பிளஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஓரியோ ஓ.எஸ். வழங்கப்பட்டு இருந்தாலும், ஆன்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படும் என அறிவித்துள்ளது,

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் புகைப்படங்களை அழகாக்க ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாஸ் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதோடு 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    நோக்கியா 5.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.86 இன்ச் 720x1520 பிக்சல் HD பிளஸ், 2.5D வளைந்த கிளாஸ், 19:9 ரக டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட்
    - மாலி-G72 MP3 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ ஆன்லைன் வலைதளத்தில் முன்பதிவு செய்யப்படும் நிலையில், இவற்றின் விநியோகம் அக்டோபர் 1-ம் தேதி முதல் துவங்குகிறது.
    எல்ஜி நிறுவனத்தின் ஜி7 ஒன், ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன், ஜி7 ஃபிட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #lgg7



    எல்ஜி நிறுவனம் ஜி7 ஒன், ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன், ஜி7 ஃபிட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி ஜி7 ஒன் ஸ்மார்ட்போனில் ஸ்டாக் ஆன்ட்ராய்டு வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டு புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்களிலும் 6.1 இன்ச் QHD பிளஸ் 19:5:9 ஃபுல் விஷன் எல்.சி.டி. சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே, IP68 தரச் சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், MIL-STD 810G ரானுவ உறுதித்தன்மை, ஹைஃபை குவாட் டி.ஏ.சி., 8 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளது.

    எல்ஜி ஜி7 ஒன் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்ன்ப்டிராகான் 835 சிப்செட், ஜி7 ஃபிட் மாடலில் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட், 4 ஜிபி ரேம் வழஹ்கப்பட்டுள்ளது. ஜி7 ஒன் மாடலில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், 16 எம்பி பிரைமரி கேமரா F/1.6 அப்ரேச்சர், ஜி7 ஃபிட் மாடலில் 16 எம்பி பிரைமரி கேமரா, F/2.2 அப்ரேச்சர் கொண்டுள்ளது.



    எல்ஜி ஜி7 ஒன் சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்
    - அட்ரினோ 540 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9
    - கைரேகை சென்சார், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 32-பிட் மேம்படுத்தப்பட்ட ஹைஃபை குவாட் டி.ஏ.சி.
    - பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0



    எல்.ஜி. ஜி7 ஃபிட் சிறப்பம்சங்கள்:

    - 6.1 இன்ச் 3120x1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 சிப்செட்
    - அட்ரினோ 530 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் எல்ஜி UX
    - 16 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9
    - கைரேகை சென்சார்
    - வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 32-பிட் மேம்படுத்தப்பட்ட ஹைஃபை குவாட் டி.ஏ.சி.
    - பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி எல்.டி.இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

    எல்ஜி ஜி7 ஒன் புதிய அரோரா பிளாக் மற்றும் புதிய மொராக்கன் புளு நிறங்களில் கிடைக்கிறது, எல்ஜி ஜி7 ஃபிட் புதிய பிளாட்டினம் கிரே மற்றும் புதிய அரோரா பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு புதிய எல்ஜி மாடல்களும் இந்த வாரம் துவங்க இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவில் வெளியிடப்படுகிறது. இவற்றின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம்.
    மோட்டோரோலா ஒன் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சீன வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் வெளியாகி இருக்கும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #motorola #smartphone
    மோட்டோரோலா ஒன் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் XT1941 என்ற மாடல் நம்பருடன் சீன வலைத்தளமான TENAA-வில் லீக் ஆகியுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளன. புகைப்படங்களில் உள்ள ஸ்மார்ட்போன், கடந்த வாரம் சீனாவில் அறிமுகமான மோட்டோ P30 ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது.

    வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சிப்செட், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, இரண்டாவது பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டாவது செல்ஃபி வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேம், முன்பக்க ஸ்கிரீனின் கீழ் மோட்டோரோலா லோகோ இடம்பெற்றிருக்கிறது. கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது.



    மோட்டோரோலா ஒன் XT1941 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.86 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 ரக 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
    - 6 ஜிபி / 4 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் வைட்/சில்வர் நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் இம்மாதத்தில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவில் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #motorola #smartphone

    புகைப்படம் நன்றி: Android Headlines
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 2.1, நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 5.1 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. #Nokia #AndroidOne


    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்த நோக்கியா 3 ஸ்மார்ட்போனின் 32 ஜிபி வெர்ஷன், கடந்த ஆண்டு அறிமுகமான நோக்கியா 5 மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக நோக்கியா 5.1 மற்றும் நோக்கியா 2 மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக நோக்கியா 2.1 அறிமுகம் செய்துள்ளது.



    நோக்கியா 2.1 சிறப்பம்சங்கள் 

    - 5.5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. டிஸ்ப்ளே
    - 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட்
    - அட்ரினோ 308 GPU
    - 1 ஜிபி ரேம் 
    - 8 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 8 எம்பி ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4100 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    நோக்கியா 3.1 சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் 720x1440 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு 
    - ஆக்சா-கோர் மீடியாடெக் MT6750N பிராசஸர்
    - மாலி T860 GPU
    - 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி 
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், F/2.0
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, F/2.0
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2990 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    நோக்கியா 5.1 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1080x2160 பிக்சல் FHD பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
    - 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P18 பிராசஸர்
    - 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
    - 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ (கோ எடிஷன்), ஆன்ட்ராய்டு பி அப்டேட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், F/2.0, PDAF
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, F/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    - நோக்கியா 2.1 ஸ்மார்ட்போன் புளு/ காப்பர், புளு/ சில்வர் மற்றும் கிரே / சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    - நோக்கியா 3.1 (3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி) புளு/ காப்பர், பிளாக்/ க்ரோம் மற்றும் வைட்/ ஐயன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இந்தியாவில் ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    - நோக்கியா 5.1 காப்பர், டெம்பர்டு புளு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.14,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    மூன்று நோக்கியா ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்டு 12-ம் தேதி முதல் விற்பனை மையங்கள், பே.டி.எம். மால் மற்றும் நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில் விற்பனை செய்யப்படுகிறது. ஹெச்.எம்.டி. குளோபல் ஆகஸ்டு 21-ம் தேதி நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 8110 4ஜி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    அறிமுக சலுகைகள்:

    - ஆஃப்லைன் விற்பனையகங்களில் வாங்குவோர் பே.டி.எம். மால் கியூ.ஆர். கோட் ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால் ரீசார்ஜ், கட்டணங்கள் உள்ளிட்டவற்றுக்கு 10% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    - நோக்கியா 3.1 அல்லது நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    - ஐடியா மற்றும் வோடபோன் பயனர்கள் ரூ.149 சலுகையை தேர்வு செய்யும் போது தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. #Nokia #AndroidOne #Smartphones
    ×