search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Infinix Note 5 Stylus"

    இன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. #Note5Stylus #smartphone


    இன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி நிறுவம் இந்தியாவில் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஆன்ட்ராய்டு ஒன் மாடலாக அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போனுடன் எக்ஸ் பென் ஸ்டைலஸ் வழங்கப்படுகிறது.
    இது 4096 அளவில் அழுத்தத்தை உணரும் என்றும் மிகவும் மென்மையான நுனிப் பகுதியை கொண்டுள்ளது.

    ஒற்றை கிளிக் மூலம் மெனு, புதிய மெனு ஆப்ஷன்களுக்கு சென்று பென் மற்றும் இரேசர் ஆப்ஷன்களில் ஒன்றை ஒற்றை கிளிக் மூலம் தேர்வு செய்ய முடியும். எக்ஸ் பென் மெனு மூலம் நோட்ஸ், மெமோஸ் எழுதுவதோடு, ஸ்கிரீஷாட் எடுப்பது, ஃபைல்களை பார்ப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

    புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P23 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    மெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ 18:9 ஐ.பி.எஸ். 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P23 16என்.எம். பிராசஸர்
    - 800MHz ARM மாலி G71 MP2 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி.
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட் மற்றும் சார்கோல் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை டிசம்பர் 4ம் தேதி துவங்குகிறது. 

    இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 மதிப்புள்ள உடனடி கேஷ்பேக் (வவுச்சர்கள் வடிவில்) மற்றும் 50 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×