search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அறிவிப்பு ரத்து"

    • நாளை வேலை நாள் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.
    • ராமநாதபுரம் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள மங்களநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெற்றதை முன்னிட்டு 6.1.2023 அன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 'உள்ளூர் விடுமுறை" அறிவிக்கப்பட்டது.

    அதனை ஈடு செய்யும் பொருட்டு 21.1.2023 சனிக்கிழமை வேலை நாளாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 21.1.2023 தை அமாவாசை என்பதால் 21.1.2023 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யப்படுகிறது.

    அதற்கு பதிலாக 28.1.2023 சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 28.1.2023 அன்று வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக கூட்டுறவு சங்கங்களின் புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் 8.1.2020 அன்று நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 8.1.2022 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எம்.உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் புதுக்கோட்டை நகர கூட்டுறவு வங்கியில் 1.12.2019 ஆம் தேதியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக கூட்டுறவு சங்கங்களின் புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் 8.1.2020 அன்று நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு 12.11.2020 அன்று நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு கடிதம் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று மற்றும் இதர நிர்வாக காரணங்களால் நேர்முகத்தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

    தற்போது ஏற்பட்டுள்ள புதிய காலி பணியிடங்களை கருத்தில்கொண்டு நிர்வாக காரணங்களின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் மேற்குறிப்பிட்ட அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 8.1.2022 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×