search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young Man injured"

    • ஆல்பர்ட் மூன்றடைப்பு அருகே ஆயநேரியில் உள்ள பால் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்
    • மூன்றடைப்பு விலக்கு நான்குவழிச் சாலையில் சென்ற போது, பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:-

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பார்ப்பரம்மாள் புரத்தை சேர்ந்தவர் . சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    மூன்றடைப்பு விலக்கு நான்குவழிச் சாலையில் சென்ற போது, பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆல்பர்ட் படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சென்னை, பெருங்குடி, பஞ்சாயத்து பிரதான சாலையை சேர்ந்த ஷியாம் சுந்தர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமலை 9-வது கொண்டைஊசி வளைவில் சென்றபோது எதிரே வந்த வேன் மோதி வாலிபர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
    • தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே இடையகோட்டை கோபால்பட்டியை சேர்ந்தவர் முத்து(25). இவர் தனது நண்பர் அகஸ்தியர்புரத்தை சேர்ந்த மாரியப்பன்(44) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சிறுமலை 9-வது கொண்டைஊசி வளைவில் சென்றபோது எதிரே வந்த வேன் மோதி முத்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கொடைக்கானல் ஏரிச்சாலையில் கனரக வாகனங்கள் நுழையாதபடி பல இடங்களில் குறுகிய தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
    • தடையை மீறி லாரி வந்ததால் விபத்து ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

    கொடைக்கானல் :

    கொடைக்கானலை சேர்ந்த காதர்மைதீன் மகன் ஜாவித்அப்சர்(19). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் ஏரிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் லாரி இவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த ஜாவித்அப்சர் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்ககு பின்பு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஏரிச்சாலையில் கனரக வாகனங்கள் நுழையாதபடி பல இடங்களில் குறுகிய தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் லாரிகள் தடையை மீறி சென்றுவருவது வாடிக்கையாக உள்ளது. அதுபோன்று வந்த ஒரு லாரியால்தான் வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வகையில் நகராட்சி மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×