என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் சேதமடைந்த பைக்
பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் படுகாயம்
- கொடைக்கானல் ஏரிச்சாலையில் கனரக வாகனங்கள் நுழையாதபடி பல இடங்களில் குறுகிய தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
- தடையை மீறி லாரி வந்ததால் விபத்து ஏற்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
கொடைக்கானல் :
கொடைக்கானலை சேர்ந்த காதர்மைதீன் மகன் ஜாவித்அப்சர்(19). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் ஏரிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் லாரி இவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஜாவித்அப்சர் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்ககு பின்பு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஏரிச்சாலையில் கனரக வாகனங்கள் நுழையாதபடி பல இடங்களில் குறுகிய தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் லாரிகள் தடையை மீறி சென்றுவருவது வாடிக்கையாக உள்ளது. அதுபோன்று வந்த ஒரு லாரியால்தான் வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாத வகையில் நகராட்சி மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






