நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - வாலிபர் படுகாயம்

ஆல்பர்ட் மூன்றடைப்பு அருகே ஆயநேரியில் உள்ள பால் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்மூன்றடைப்பு விலக்கு நான்குவழிச் சாலையில் சென்ற போது, பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - வாலிபர் படுகாயம்
Published on

களக்காடு:-

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பார்ப்பரம்மாள் புரத்தை சேர்ந்தவர் . சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் மோட்டார்சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

மூன்றடைப்பு விலக்கு நான்குவழிச் சாலையில் சென்ற போது, பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆல்பர்ட் படுகாயம் அடைந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சென்னை, பெருங்குடி, பஞ்சாயத்து பிரதான சாலையை சேர்ந்த ஷியாம் சுந்தர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com