என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Womens Hockey WorldCup"

    • ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் இந்தியாவின் மணிஷா சவுகான் ஒரு கோல் அடித்தார்.
    • இறுதியில், இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.

    ஐதராபாத்:

    16-வது பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதிச்சுற்று ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

    இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் முறையே இங்கிலாந்து, இத்தாலியும், 'பி' பிரிவில் இந்தியா, ஸ்காட்லாந்தும் முதல் இரண்டு இடங்களை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன. இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் இரு தகுதிச்சுற்றிலும் (சாண்டியாகோ, ஐதராபாத் சுற்று) 4-வது இடம் பிடிக்கும் அணிகளில் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் அணியும் நேரடியாக தகுதி பெறும்.

    இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற அரையிறுதியில் இந்தியா, இத்தாலி அணிகள் மோதின. இரு அணிகளும் தொடக்கம் முதலே தீவிரமாக ஆடின. முதல் பாதி முடிவில் எந்த அணியும் கோல் அடிக்காததால் 0-0 என ஆனது.

    ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் இந்தியாவின் மணிஷா சவுகான் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதன்பின் யாரும் கோல் அடிக்கவில்லை.

    இறுதியில், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துடன் மோதுகிறது.

    உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7-0 என்ற கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்றது. #WomensHockeyWorldCup
    லண்டன்:

    உலக கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ‘ஏ’பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் நெதர்லாந்து- தென் கொரியா அணிகள் மோதின.

    இதில் நெதர்லாந்து 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.



    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி 3-0 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்து ‘சி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 6-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

    இந்தப் போட்டியில் விளையாடும் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துடன் ‘டிரா’ செய்து இருந்தது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்தை 26-ந்தேதி சந்திக்கிறது. #WomensHockeyWorldCup
    ×