search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "womans world cup"

    மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. #WomensWorldT20 #WWT20 #EngvAUS

     

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்த முதல் அரை இறுதியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் ஆஸ்திரேலியா மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 142 ரன் எடுத்தது. ஹீலி 46 ரன்னும், லென்னிங் 31 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 17.3 ஓவரில் 71 ரன்னுக்கு சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 71 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 3 முறை சாம்பியனான (2010, 2012, 2014) ஆஸ்திரேலியா 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடந்த (2016) உலக கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் தோற்றதற்கு ஆஸ்திரேலியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

    அதன்பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

    இதையடுத்து சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இந்திய நேரடிப்படி வருகிற 25-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. #WomensWorldT20 #WWT20 #EngvAUS

    ×