என் மலர்
நீங்கள் தேடியது "woman walking"
புதுச்சேரி:
புதுவை ஆம்பூர் சாலையில் ஒரு பெண் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மது பார் அருகில் நடந்து வந்தபோது பின்புறம் இருந்து வந்த வாலிபர் அந்த பெண் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினார்.
இதைக்கண்ட அந்த பெண் கூச்சலிட்டபடி அவரை துரத்தினார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அந்த வாலிபரை விரட்டி சென்றனர்.
அந்த வாலிபர் ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை நடுவே உள்ள வாய்க்காலில் குதித்து ஓடிவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களில் சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பெரியவாய்க்காலில் இறங்கி வாலிபரை தேடினார். ஆனால், அந்த வாலிபர் வாய்க்காலின் வேறு வழியே தப்பி சென்று விட்டார்.
இதையடுத்து போலீசார் அப்பகுதியில் இருந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த வழிப்பறி சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






