search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "white pasta"

    • உணவில் நிறைய வெள்ளை நிற பொருட்கள் இடம் பெறுகின்றன.
    • உடல்நல பிரச்சினைகளுக்கு மூல காரணமாக வெள்ளை உணவுகள் உள்ளன.

    அரிசி முதல் சர்க்கரை வரை நாம் தினசரி உட்கொள்ளும் உணவில் நிறைய வெள்ளை நிற பொருட்கள் இடம் பெறுகின்றன. இந்த வெள்ளையர்கள் நம் வாழ்க்கையை சீர்குலைக்கிறார்கள் என்பதை தெரிந்தும் பலரும் அதனையே விரும்பி உட்கொள்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பு, உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு மூல காரணமான வெள்ளை உணவுகள் உள்ளன.

    உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, வெள்ளை பொருட்களை நீக்கி, அவற்றுக்கு மாற்றாக அதே வகையை சேர்ந்த வண்ண பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். தவிர்க்க வேண்டிய வெள்ளை பொருட்கள் பற்றியும், அவற்றுக்கான ஆரோக்கிய மாற்று பற்றியும் பார்ப்போம்.

     வெள்ளை ரொட்டி:

    இது சுத்திகரிக்கப்பட்ட மாவை கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதில் தவிடு நீக்கப்படுவதோடு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் அதிகம் இழக்கப்படுகின்றன. இது பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப் பொருளில் தயாரிக்கப்படுகிறது.

    ஆரோக்கியமான மாற்று: முழு தானிய ரொட்டி, கோதுமை ரொட்டி.

    வெள்ளை பாஸ்தா:

    இதுவும் சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படுகிறது. மிகக் குறைந்த நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவிலான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது செரிமானமாவதற்கும் கடினமாக இருக்கும்.

    ஆரோக்கியமான மாற்று: முழு தானியத்தில் தயாரான பாஸ்தா

    வெள்ளை அரிசி:

    இதுவும் சுத்திகரிக்கப்பட்ட தானிய வகையில் அடங்கும். நெல்லின் உமி நீக்கப்பட்டு பாலீஷ் செய்யப்படுவதன் மூலம் ஊட்டச்சத்துக்களை இழக்கிறது. குறிப்பாக நார்ச்சத்து மற்றும் புரதம் இல்லாத நிலையை உண்டாக்குகிறது. அப்படிப்பட்ட வெள்ளை அரிசியை அதிகமாக உட்கொள்வது எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

    ஆரோக்கியமான மாற்று: பழுப்பு அரிசி

     வெள்ளை சர்க்கரை:

    இது மிகக் குறைவான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட இனிப்புப் பொருள். கலோரிகளைத் தவிர, மிகக் குறைந்த ஊட்டச்சத்துகளையே வழங்கும். நீரிழிவு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க செய்யும். குறிப்பாக தேவையற்ற எடை அதிகரிப்பு, இதய நோய்க்கான ஆபத்தை அதிகப்படுத்தும்.

    ஆரோக்கியமான மாற்று: நாட்டு சர்க்கரை, இயற்கை பழங்கள்

    வெள்ளை உப்பு:

    மனித உடலுக்கு உப்பு அவசியம் என்றாலும், வெள்ளை உப்பு அதிகம் சேர்ப்பது இதய நோய், பக்கவாதம், உடல் பருமன் மற்றும் சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.

    ஆரோக்கியமான மாற்று: இளஞ்சிவப்பு உப்பு,

     உருளைக்கிழங்கு:

    உருளைக்கிழங்கை சமைக்கும் போது பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் நீங்கிவிடும். உடலுக்கு குறைவான பலன்களையே கொடுக்கும். ஆனால் எடை அதிகரிப்பு, நீரிழிவு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

    ஆரோக்கியமான மாற்று: சர்க்கரை வள்ளிக்கிழங்கு

    இறைச்சி:

    விலங்கு வகை இறைச்சிகளில் காணப்படும் கொழுப்புகள் அடர்த்தியானவை. பெரும்பாலானவை நிறைவுற்ற கொழுப்புகளை கொண்டவை. சிலருக்கு கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், இதய நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கவும் செய்துவிடும். ஆரோக்கியமான மாற்றுகள்: தாவர அடிப்படையிலான கொழுப்புகள் (ஆலிவ், நட்ஸ்கள், விதைகள் மற்றும் வெண்ணெய்)

    ×