search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Whey"

    • கொலஸ்ட்ராலை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • மோர் சூட்டை தணித்து உடலை வரண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது.

    கெட்ட கொழுப்பு என்பது நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் படிந்து காணப்படும் நிலை. இது தவறான உணவுப்பழக்க வழக்கத்தினால் வருவதாகும். இது ரத்த நாளங்களில் உறைவதால் ரத்த ஓட்டம் சீராக நடைபெறாமல் பல பிரச்சனைகள் வரும். இந்த கெட்ட கொலஸ்ரோலை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் மோர் குடிப்பதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எவ்வாறு குறைக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    மோர் சூட்டை தணித்து உடலை வரண்ட நிலையில் இருந்து பாதுகாக்கிறது. வெண்ணெய் நீக்கப்பட்ட தயிரில் மோரை தயாரிக்கலாம்.

     மோரில் இஞ்சி, கருமிளகு, சீரகம் போன்றவற்றை சேர்க்கும் போது இது இரட்டிப்பான நன்மை தரக்கூடியது. காலையில் டீ காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை தவிர்த்து காலையில் ஒரு கிளாஸ் மோர் குடித்து வந்தால் மிகவும் நன்மை தரும்.

    மோர் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது. இதனால் வயிறு சுத்தப்படுத்துவதுடன் உடலின் வளர்சிதை மாற்றம் அளவு அதிகரிக்கிறது.

    பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்டக்கூடிய வாயுப்பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. இதில் தேவையான அளவு புரதம் இருக்கிறது. இதனால் எலும்புகள் பலமடைந்து தோல் ஆரோக்கியமாக இருக்கும். தோல் வறட்சி இல்லாமல் இருப்பதால் பளபளப்பான தோற்றத்தை கொடுக்கும்.

    மோரில் வைட்டமின் C, B நிறைந்துள்ளதால், தலைமுடிக்கும் நல்லது, சருமத்துக்கும் நல்லது. புரோபயாடிக் லாக்டிக் அமிலம் மோரில் உள்ளதால், தலைமுடிக்கும், சருமத்துக்கும் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.

    ×