search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Association meeting"

    • மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கவும் ஆலோசனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டரிடம் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்க பொது பேரவை கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் சக்தி நாயப் சுபேதார் நடராஜ், பிளைட் லெப்டினன்ட் தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை இணைந்து நடத்தி வரும் இலவச யூனிபார்ம் சர்வீஸ் மற்றும் போட்டித் தேர்வுபயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கவும் ஆலோசனை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டரிடம் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் முன்னாள் ராணுவ வீரர்களின் ஆவணங்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் ராணுவ நல சங்க பொருளாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

    • திருச்சி மாவட்டம், நெ. 1 டோல்கேட், நலிந்தோர்நலவாழ்வு சங்கத்தின் 2021-22-ம் ஆண்டுக்கான ஆண்டு மகாசபைக்கூட்டம் பிச்சாண்டார் கோயில்ல நடைபெற்றது.
    • மகாசபைக்கூட்டத்தில் முதன்மை செயல் அலுவலர் பிரசன்னா வரவேற்றுப்பேசினார்.

    திருச்சி,

    திருச்சி மாவட்டம், நெ. 1 டோல்கேட், நலிந்தோர்நலவாழ்வு சங்கத்தின் 2021-22-ம் ஆண்டுக்கான ஆண்டு மகாசபைக்கூட்டம் சங்கத்தலைவர் தனப்பிரகாசம் தலைமையில் பிச்சாண்டார் கோயில் சங்க நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.

    மகாசபைக்கூட்டத்தில் முதன்மை செயல் அலுவலர் பிரசன்னா வரவேற்றுப்பேசினார். சங்க செயலபாட்டு ஆண்டறிக்கையினை செயலர் லலிதாமேரி சமர்ப்பித்தார்.

    சங்க வரவு செலவு குறித்த தணிக்கை செய்யப்பட்ட நிதியறிக்கையினை சங்க பொருளாளர் சத்தியநாதன் எடுத்துரைத்தார், உபதலைவர் மணிமேகலை மற்றும் உறுப்பினர்கள் கீர்த்தனா, ஜெயராமன், சேவியர் ரோடரிக்ஸ், ஜாக்குலின்மேரி, கற்பகம், விஜயகுமார், கணேசன், விக்டர், ரோஜா ஆரோக்கியமேரி, ராஜசேகரன் மற்றும் சட்ட ஆலோசகர் சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் மேற்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

    ×