search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water for"

    • தற்போது வனத்துக்குள் உள்ள நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டுள்ளது.
    • வேட்டைக்கும்பலால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் வனத்துறையினர் கவனம் செலுத்துகின்றனர்.

    உடுமலை:

    மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இங்கு மான், காட்டெருமை, யானை, புலி, சிறுத்தை, கரடி, உடும்பு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ள இங்கு தற்போது கோடை காலமாக இருப்பதால் வன விலங்குகளை பாதுகாப்பதில் வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வன விலங்குகள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவிக்கும் அபாயம் உள்ளது. மழைக்காலங்களில் வனப்பகுதிக்குள் உள்ள சிற்றாறுகள், ஓடைகள், குட்டைகள் மற்றும் தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் விலங்குகளின் தாகம் தணிக்க உதவும்.

    ஆனால் தற்போது வனத்துக்குள் உள்ள நீர்நிலைகள் முற்றிலுமாக வறண்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு வனப்பகுதியில் ஆங்காங்கே வனத்துறையின் சார்பில் தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. ஆரம்ப காலங்களில் லாரிகள் மூலம் கொண்டு சென்று இந்த தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது. ஆனால் அதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களால் அந்தந்த பகுதிகளில் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்து சோலார் ேமாட்டார் மூலம் வனத்துறையினர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வந்தனர்.

    தற்போது வன விலங்குகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் வகையில் சோலார் தானியங்கி மோட்டார்களை பல இடங்களில் அமைத்துள்ளனர். ேமலும் அந்த பகுதிகளில் வனவிலங்குகள் வருவதால் அதனை குறிவைத்து வேட்டைக்கும்பலால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் வனத்துறையினர் கவனம் செலுத்துகின்றனர். அதன்படி அந்த பகுதிகளில் கேமரா பொருத்தி தீவிரமாக கண்காணித்து வனவிலங்குகள் சாலைக்கு வருவது பெருமளவு தவிர்க்கப்படும். 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.97 அடியாக குறைந்து உள்ளது.
    • கீழ்பவானி பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 89.97 அடியாக குறைந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 812 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக இன்று முதல் பவானிசாகர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல காளிங்கராயன் பாசனத்திற்காக 600 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 1300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    குண்டேரிபள்ளம் அணை பகுதியில் இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததது. இதன் காரணமாக அணை தனது முழு கொள்ளளவான 41.75 அடியை எட்டியது.

    இதேபோல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.92 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 29.95 அடியாக உள்ளது.

    ×