search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijila Sathyananth"

    • தமிழக சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
    • மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டிகள் நடத்தப் படுகிறது.

    இதற்காக சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்ட அளவில் பேச்சுப்போட்டிக் நடத்தப்படுகின்றன.

    இதில் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.10 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதேபோல் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2 -வது பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

    மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். இப்போட்டிகளை சென்னையில் நடைபெறும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்ட பொறுப்பாளராக செய்யது அகமது, ஒருங்கி ணைப்பாளராக நான்

    ( விஜிலா சத்தியானந்த்) பொறுப்பாளராக அந்தோணி செல்வராஜ், அனீஸ் பாத்திமா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் smcelocution@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். போட்டிகள் வருகிற 1-ந் தேதி தொடங்கி ஜூலை 3-ந்தேதி முடிவடைகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்குகிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×