search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "venugopal dhoot"

    • சந்தா கோச்சார் ஐசிஐசிஐ தலைமை பொறுப்பிலிருந்து பதவி விலகினார்
    • கோச்சார் தம்பதி மற்றும் 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது

    1979ல், மும்பையில் வேணுகோபால் தூத் என்பவரால் தொடங்கப்பட்டு பன்னாட்டு நிறுவனமாக வளர்ச்சி பெற்றது வீடியோகான் குழுமம் (Videocon group).

    2009 ஜூன் மாதத்திலிருந்து 2011 அக்டோபர் காலகட்டம் வரை, வீடியோகான் குழுமத்திற்கு, ஐசிஐசிஐ தனியார் வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சந்தா கோச்சார் (Chanda Kochhar) , தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, நிறுவனர் வேணுகோபால் தூத்திற்கு ரூ.3,250 கோடி கடனாக வழங்கியதாகவும், தகுதியற்ற கடன் வழங்கியதற்கு ஈடாக சந்தாவின் கணவர் தீபக் கோச்சாருக்கு வீடியோகான் லஞ்சம் வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இதை தொடர்ந்து சந்தா கோச்சார் வங்கியின் உயர் பதவியிலிருந்து விலகினார்.

    இதை விசாரித்த மத்திய புலனாய்வு துறை (CBI) 2023 ஏப்ரல் மாதம், சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், மற்றும் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்தது.

    2022 டிசம்பர் 23 அன்று சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டனர். 3 நாட்கள் கடந்து வேணுகோபால் தூத் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

    இந்நிலையில், இன்று சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட போது விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என நம்ப இடமிருப்பதாகவும், அவரது கைது சட்டவிரோதம் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    கோச்சார் தம்பதியினருக்கு இடைக்கால ஜாமீனையும் நீதிமன்றம் வழங்கியது.

    பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான வீடியோகான் நிறுவனத்தின் அதிபர் வேணுகோபால் தூத் மீது பங்கு மோசடி வழக்கில் டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். #Vediocon #DelhiPolice
    பிரபல எலெக்ட்ரானிக் பொருட்கள் நிறுவனமான வீடியோகானின் அதிபராக வேணுகோபால் தூத் இருந்து வருகிறார். இவர் திருபாதி செராமிக்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தின் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான பங்குகளை சமீபத்தில் இந்த நிறுவனம் விற்பனை செய்தது. ஆனால், அவை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட பங்குகள் என்பதும், மறுவிற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக புகாரின் அடிப்படையில், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் குற்றவாளியாக வேணுகோபால் சேர்க்கப்பட்டிருந்தார்.  இரண்டு ஆண்டுகளாக இதன் விசாரணை நடந்து வந்த நிலையில் இப்போது இந்த வழக்கு மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணை முடிந்து அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    மேலும், வீடியோகான் நிறுவன அதிபர் வேணுகோபால் தூத்,  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் இணைந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றசாட்டை சி.பி.ஐ., அமலாக்க பிரிவு, மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. #Vediocon #DelhiPolice
    ×