என் மலர்

  நீங்கள் தேடியது "Vandaloor park"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. #VandaloorPark #ButterflyPark
  வண்டலூர்:

  வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா 2.7 ஹெக்டேர் பரப்பளவில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் 200 வகையான தாவரங்கள் நடப்பட்டு 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வருகை புரிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது, குறிப்பிட்ட பருவகாலங்களில் மட்டுமே இவை வருகை தரும். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வார்தா புயலால் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் இல்லம் வெகுவாக பாதிக்கப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், வெவ்வேறு காலகட்டங்களில் படிப்படியாக வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

  தற்போது வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் பூங்காவிற்குள் புதிதாக செடிகள் நடப்பட்டு உள்-அரங்கமும் சீரமைக்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் மீண்டும் வர தொடங்கியுள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது.

  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 6 மாத பெண் சிங்கக்குட்டிக்கு ஜெயா என்று பெயர் சூட்டினார். #EdappadiPalaniswami

  சென்னை:

  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு அவை இனப்பெருக்கம் செய்து வருகின்றன. சிவா என்ற ஆண் சிங்கத்திற்கும், நீலா என்ற பெண் சிங்கத்திற்கும் 27.1.2018 அன்று பெண் சிங்க குட்டி பிறந்தது. இந்த பெண் சிங்கக்குட்டிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘‘ஜெயா’’ என்று பெயர் சூட்டினார்.

  “நீலா என்ற பெண் சிங்கத்திற்கும், சிவா என்று ஆண் சிங்கத்திற்கும் பிறந்த 6 மாத பெண் சிங்கக்குட்டிக்கு, புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியோடு, “ஜெயா” என்று பெயர் சூட்டப்படுகிறது. புரட்சித்தலைவி அம்மா விலங்குகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர். இந்த உயிரியல் பூங்கா சிறந்து விளங்குவதற்காக பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறார்கள்.

  இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 சிங்கங்கள் இருக்கின்றன, அதில் 10 பெண் சிங்கமும், 7 ஆண் சிங்கமும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் 193 வகையான விலங்குகள் இருக்கின்றன. மொத்தம் 2410 விலங்குகள் இருக்கின்றது. அதோடு 46 வகையான பறவைகள் இந்த உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பார்வைக்காகவும், அவர்கள் கண்டுகளிப்பதற்காகவும் வண்டலுர் உயிரியல் பூங்காவில், விலங்குகளும், பறவைகளும் அரசால் சிறப்பான முறையிலே பேணிக்காத்து வளர்க்கப்பட்டு வருகின்றது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

  இங்கே வருகின்ற சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்காக விரைவிலே காண்டாமிருகம் ஒன்று பீகார் மாநிலத்திலிருந்து பாட்னா மிருக காட்சி சாலையில் இருந்து பெறப்பட்டு நம்முடைய உயிரியில் பூங்காவிற்கு விரைவில் கொண்டுவரப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalaniswami

  ×