search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vanabathrakali amman"

    • கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலும் இருந்து வருகிறது.
    • பக்தர்கள் அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலும் இருந்து வருகிறது.கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.

    அதேபோல் ஆடிக்கு ண்டம் திருவிழா இக்கோவிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 19-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் ஆடிக்குண்டம் திருவிழா ெதாடங்கியது. இதையடுத்து இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.தொடர்ந்து நாளை பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல்,அதை தொடர்ந்து ஆடி 10-ம் நாள் செவ்வாய்கிழமை அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து ஆடி 11-ம் நாள் மாவிளக்கு, பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, ஆடி 12-ம் நாள் ஆடி அமாவாசை பரிவேட்டை, ஆடி 13-ம் நாள் மகா அபுஷேகம் மஞ்சள் நீராடல், ஆடி 16-ம் நாள் 108 குத்துவிளக்கு பூஜை,ஆடி 17-ம் நாள் மறுபூஜை உடன் ஆடிக்குண்டம் திருவிழா நிறைவடையும்.ஆடிக்குண்டம் திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தாசம்பத்,உதவி ஆணையர் செயல் அலுவலர் கைலசாமூர்த்தி செய்து வருகின்றனர்.

    மேலும் ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில், மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் (பொறுப்பு),போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவிகோட்டத்தில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், தீபாராதனை, லட்சார்ச்சனை, கிராமசாந்தி முனியப்பன் பகாசூரன் வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 6-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு யாகசாலை அமைத்து தனசேகர குருக்கள், கண்ணன் ஆகியோர் யாக பூஜைகளை செய்தனர். காலை 7 மணிக்கு தேக்கம்பட்டி தேசிய கவுடர் கிராம மக்கள் சார்பாக அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் தலைமை பூசாரி பரமேஸ்வரன் செய்தார்.

    அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு தேக்கம்பட்டி கிராம மக்கள் சார்பாக கொடியேற்று விழா நடந்தது. இதற்காக சிம்ம வாகன கொடி தேக்கம்பட்டியில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைந்தது. அங்கு கோவில் சார்பாக பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையரும், செயல் அலுவலருமான க.ராமு ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள முத்தமிழ் விநாயகர் கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைக்கு பின்னர் மீண்டும் அங்கிருந்து நாதஸ்வர இசை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை அடைந்தது.

    அம்மன் சன்னதியில் சிம்மவாகன கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பகல் 12 மணிக்கு கொடிமரத்தில் சிம்ம வாகன கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அம்மா தாயே, பராசக்தி என்று பக்தி கோஷமிட்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியில் ஊர் கவுடர்கள் திப்பையன், மூர்த்தி, சிவராமலிங்கம், கோவிந்தராஜ், சண்முகசுந்தரம், குருந்தமலை கோவில் முன்னாள் அறங்காவலர்கள் நடராஜன், ராஜேந்திரன் மற்றும் தேக்கம்பட்டி கிராம மக்கள் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி 12 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும், நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, 6 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    ×