search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US Capitol"

    • அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப்போவதாக போன் வந்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செனட் கட்டட வளாகத்தில் சோதனை நடத்தினர்.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிட்டோல் போலீஸ் படை அலுவலகத்தில் உள்ள 911 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வந்தது.

    அதில், அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப் போவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செனட் கட்டட வளாகத்தில் சோதனை நடத்தினர். எந்நேரமும் துப்பாக்கிச்சூடு நடக்கலாம் என கூறப்பட்டதால் அங்கு பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டது.

    போலீசார் நடத்திய சோதனையில் எந்த ஆயுதமும், யாரும் சிக்கவில்லை. இறுதியில் தொலைபேசியில் வந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    வாஷிங்டன் நகரில் வைக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். #GeorgeHWBush #SpecialAirMission41 #RIPBush
    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அந்நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.

    நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வெள்ளிக்கிழமை  தனது 94-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த புஷ் உடலை டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு வருவதற்காக அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானத்தை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்தார்.

    பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் இந்த சிறப்பு விமானத்துக்கு ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று பெயர். தற்போது புஷ் உடலை கொண்டு வரும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டுள்ளதால் இவ்விமானத்துக்கு ‘41-வது சிறப்பு நோக்கம்’ (Special Air Mission 41) என தற்காலிக பெயர் சூட்டப்பட்டது.

    அந்த விமானத்தில் புஷ் உடல் வாஷிங்டன் நகரை வந்தடைந்தது. விமான நிலையத்தில் முப்படை அணிவகுப்புடன் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து கேபிடோல் ஹில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசு மாளிகைக்கு புஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.

    இங்குள்ள வளாகத்தில் புதன்கிழமை காலை வரை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அதிபரின் உடலுக்கு தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலினியா டிரம்ப் ஆகியோர் இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



    மேலும், முன்னாள் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புஷ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இங்குள்ள தேசிய தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட வெகுசில முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    பின்னர், மீண்டும் விமானம் மூலம் புஷ் உடல் புதன்கிழமை மாலை டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்ட்டன் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அவரது  மனைவி பார்பரா புஷ் சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் வரும் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.

    புஷ் குடும்பத்தாரைப்பற்றி முன்னர் அதிகமாகவும் கடுமையாகவும் விமர்சித்துவந்த அதிபர் டிரம்ப் அவரது  இறுதிச்சடங்கில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  #GeorgeHWBush #SpecialAirMission41 #RIPBush #GeorgeHWBushfuneral
    ×