என் மலர்
நீங்கள் தேடியது "UP Hospital"
- நோயாளிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் சிதறும் உணவுத் துண்டுகள் காரணமாகவே எலிகள் அதிகளவில் வருகின்றன
- உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைகளில் எலிகள் உலா வருவது இது முதல்முறையல்ல.
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மருத்துவக் கல்லூரியில் ஒரு வார்டில் எலிகள் சுற்றித்திரியும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்தப் பதிவில்,
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோண்டா மருத்துவக் கல்லூரியின் இந்தக் காட்சியைக் கவனியுங்கள். இங்கே, மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில், எலிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. குண்டாகவும், மெலிந்தும், உருண்டையாகவும்... என அனைத்து வகையான எலிகளும் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த மருத்துவக் கல்லூரி வார்டு மனிதர்களுக்கானது அல்ல, எலிகளுக்கானது என்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது." எனக் குறிப்பிட்டுள்ளது.
கோண்டா மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் வார்டில், நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகிலும், ஆக்சிஜன் குழாய்கள் மீதும் எலிகள் ஓடும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா நிரஞ்சன் மருத்துவக் கல்லூரி முதல்வரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். உடனடியாக வார்டில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
நோயாளிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் சிதறும் உணவுத் துண்டுகள் காரணமாகவே எலிகள் அதிகளவில் வருவதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைகளில் எலிகள் உலா வருவது இது முதல்முறையல்ல. பலமுறை இதுபோன்ற புகார்வது எழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மற்றும் ஜபல்பூர் மருத்துவமனைகளிலும் சமீப காலங்களில் எலித் தொல்லை மற்றும் நோயாளிகளை எலிகள் கடித்த புகார்கள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- விசாரணக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக கலெக்டர் தகவல்
- மருத்துவமனை நிர்வாகமும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தனியார் மருத்துவமனையில் ரத்த பிளேட்லெட்டுக்குப் பதில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். போலி ரத்த பிளேட்லெட்டுகள் விற்பனை செய்ததாக கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த நோயாளி உயிரிழந்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து மாற்றப்பட்டு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டை மாவட்ட கலெக்டர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். நோயாளிக்கு மோசமாகப் பாதுகாக்கப்பட்ட பிளேட்லெட்டுகள் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் அறிக்கை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றார்.
இதேபோல் மருத்துவமனை நிர்வாகமும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது. பிளேட்லெட்டுகள் நோயாளிகளின் உறவினர்களால் வாங்கப்பட்டதாக கூறியுள்ளது.
'நோயாளியின் ரத்த பிளேட்லெட் அளவு 17,000 ஆகக் குறைந்ததைத் தொடர்ந்து அவரது உறவினர்களிடம் ரத்த பிளெட்லெட்டுகளை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டோம். அவர்கள் ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து ஐந்து யூனிட் பிளேட்லெட்களைக் கொண்டு வந்தனர். மூன்று யூனிட்களை நோயாளிக்கு ஏற்றிய பிறகு, நோயாளிக்கு பக்கவிளைவு ஏற்பட்டது. எனவே நாங்கள் மேற்கொண்டு ஏற்றுவதை நிறுத்தினோம்," என மருத்துவமனை உரிமையாளர் கூறி உள்ளார். மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவ கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் கீழ் லாலா லஜ்பத் ராய் என்கிற மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில், அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவர்கள் 5 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்தனர். 2 நாட்களில் 5 முதியவர்கள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஏ.சி. எந்திரம் கடந்த சில தினங்களாக வேலை செய்யவில்லை என்றும், அதனால் வெயிலின் தாக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் முதியவர்கள் உயிர் இழந்ததாகவும் அவர்களுடைய உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.






