என் மலர்
நீங்கள் தேடியது "token counter"
- பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
- சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைக்காக சண்டையில் ஈடுபட்ட காட்சிகள், இளம்ஜோடிகளின் அத்துமீறல், ஆபாசமாக உடை அணிந்து வந்த பயணிகள் என பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் டோக்கன் கவுண்டரில் 2 பயணிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
அப்போது சக பயணி ஒருவர், அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.
இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.






