என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur Theft"

    • கோயம்புத்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு லாரியில் இரும்பு தளவாட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
    • லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் திருடப்பட்டது.

    திருத்தணி:

    ஆர்.கே. பேட்டை அடுத்த மோகினிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். லாரி டிரைவர். இவர் கோயம்புத்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு இரும்பு தளவாட பொருட்களை ஏற்றி சென்றார்.

    அப்போது நண்பரான பந்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவருடன் சேர்ந்து லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி விற்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2பேரையும் கைது செய்தனர்.

    • பொன்னேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • பொன்னேரி சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருட்டு நடைபெறுவதாகவும் போலீசார் ரோந்து வரவேண்டும் எனவும் பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த புதிய பேருந்து நிலையம் அருகில் மளிகை மற்றும் காய்கறி கடை நடத்தி வருபவர் தினகரன். இவரது கடையில் ஆவூரை சேர்ந்த நீலா என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் கடைக்கு வந்த தினகரன் கடையின் முன்பு நிறுத்திவிட்டு வேலை பார்த்து வந்தார். பின்னர் பணி முடித்து வீட்டிற்கு செல்வதற்காக வாகனத்தை தேடியபோது காணவில்லை. அருகில் தேடியும் கிடைக்காததால் கடையில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் பைக்கை திருடி கொண்டு செல்வது தெரியவந்தது.

    இதைப் போன்று இன்று காலை காய்கறி கடையில் வேலை செய்து வருபவர் வேலு. காலையில் சைக்கிளில் வந்து கடை திறந்து வியாபாரம் செய்தார். இதற்கிடையே கடை முன்பு நிறுத்தி இருந்த சைக்கிள் திடீரென காணாமல் போனது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் அடையாளம் தெரியாத மர்மநபர் சைக்கிளை திருடுவது பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். பொன்னேரி சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருட்டு நடைபெறுவதாகவும் போலீசார் ரோந்து வரவேண்டும் எனவும் பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×