search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thug detention act"

    குமரி மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த 63 பேர் மீது போலீசார் குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணித்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மேலும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்தவர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 3 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கொலையில் தொடர்புடைய கீழசரக்கல்விளையை சேர்ந்த பிரதீப் (வயது 22). இளங்கடை பகுதியை சேர்ந்த மனோ என்ற உஷ்மான் (30), கோட்டார்கம்பளம் தெருவை சேர்ந்த ரமேஷ் (20) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    மேலும் இதேபோன்று மற்றொரு கொலை முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதையத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அவர்களை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை ஜெயிலில் அடைத்தனர்.

    கடந்த 11 மாதங்களில் குண்டர் தடுப்புச்சட்டத்தில் 63 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. #tamilnews
    குண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை என்று ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. #ChennaiHighCourt
    சென்னை:

    புதுச்சேரியை சேர்ந்த செந்தில் என்கிற ரமேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு காலாப்பேட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்துசெய்யக்கோரி அவரது மனைவி பத்மாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா, ஆர்.ராமதிலகம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சமூகவிரோதிகளை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அந்த சட்டத்தை பிரயோகிக்கும்போது அதிகாரிகள் சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை.

    குண்டர் தடுப்புச்சட்டத்தில் இருந்து தனது கணவரை விடுவிக்கக்கோரி மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை அரசு அதிகாரிகள் முறையாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்காமல், அறிவுரைக்குழுமத்திடம் தான் முறையிட வேண்டும் எனக்கூறி தங்களது கடமையை தட்டிக்கழித்துள்ளனர்.

    அறிவுரைக்குழுமத்திடம் விசாரணை நிலுவையில் இருந்தாலும், அரசிடம் அளிக்கப்படும் கோரிக்கை மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே சில வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால், அதிகாரிகள் இதை முறையாக பின்பற்றவில்லை.

    எனவே, மனுதாரரின் கணவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டம் ரத்துசெய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும்போது சமூகவிரோதிகள் எளிதில் தப்பிக்காமல் இருக்க சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ChennaiHighCourt
    ×