என் மலர்
நீங்கள் தேடியது "The wild elephant"
- 5 குட்டிகளுடன் 12 யானைகள் வனத்தை விட்டு வெளியில் வந்தன.
- ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கோவை,
கோவை பேரூர் அருகே தீத்தி பாளையம் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் உள்ளவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த பகுதியையொட்டி வனப்பகுதி உள்ளது.
இதனால் வனவிலங்குகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக யானையின் அட்டகாசம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 5 குட்டிகளுடன் 12 யானைகள் வனத்தை விட்டு வெளியில் வந்தன. இந்த யானைகள் முதலில் அந்த பகுதியில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்த மான இடத்திற்குள் புகுந்தது. அங்கு பயிரிட்டு இருந்த அரை ஏக்கர் பயிர்களை மேய்ந்தது.
தொடர்ந்து தீத்திபாளையம் கிராமத்தில் உள்ள நடராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு வெகுநேரமாக சுற்றி திரிந்த யானை கூட்டங்கள் 2 ஆழ்துளை கிணறுகளிலுள்ள உபகரணங்களை முழுவதையும் உடைத்து சேதப்படுத்தியது.
மேலும் தோட்டத்தில் தக்காளி பயிர் செய்வதற்காக போடப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன உபகரணங்களையும் சேதப்படுத்தியது. இதனால் அவருக்கு ரூ.40 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






