என் மலர்

  நீங்கள் தேடியது "Thanjavur attack"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே ஓட்டரி உரிமையாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவரை போலீசார் தேடி வருகின்றனர்.
  தஞ்சாவூர்:

  தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் பாக்கியம் நகரை சேர்ந்தவர் பிரசாத் (வயது 40). இவர் மாரியம்மன் கோவில் அருகே சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார்.

  இவரது ஓட்டலுக்கு தஞ்சை ராராமுத்திர கோட்டை புதுத்தெருவைச் சேர்ந்த பழனிவேல் (23), அஜித்குமார் (26), மோகன் (29) மற்றும் பிரபாகரன் (32) ஆகிய 4 பேர் சாப்பிட சென்றனர். அவர்கள் ஓட்டலில் இருந்த பிரசாத்திடம் சாப்பாடு இருக்கிறதா? என கேட்டுள்ளனர். அவர் சாப்பாடு இல்லை காலியாகி விட்டது என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் பிரசாத்திடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பழனிவேல் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து பிரசாத்தை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பிரசாத் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசில் பிரசாத் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல், அஜித்குமார்,மோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரபாகரனை தேடி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் தனியார் பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மற்றொரு டிரைவரை கைது செய்தனர்.
  தஞ்சாவூர்:

  ஒரத்தநாடு அருகே காரமணிதோப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது-23). தனியார் பஸ் டிரைவர். இவருக்கும் இன்னொரு தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரியும் அரசபட்டையை சேர்ந்த ஆனந்தராஜ் (24) என்பவருக்கும் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

  இந்த நிலையில் முருகேசன் ஒரத்தநாட்டிலிருந்து தஞ்சை நாஞ்சிக்கோட்டைக்கு பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது அவருக்கு பின்னால் பஸ்சை ஓட்டி வந்த ஆனந்தராஜ், முருகேசன் ஓட்டிய பஸ்சுக்கு முன்பு சென்று அவரை தாக்கியதுடன் பஸ்சின் சைடு கண்ணாடியையும் உடைத்ததாக கூறப்படுகிறது.

  இதுபற்றி முருகேசன் தமிழ் பல்கலைக்கழகப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார், அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர்.
  ×