search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thali Road"

    • எந்த நேரமும் தளி சாலை வாகன நெருக்கத்துடன் பரபரப்பாக காணப்படும்.
    • இதன் வழியாக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தளி சாலை பிரதானமாக உள்ளது.இந்த சாலையை திருமூர்த்திமலை, அமராவதி,மூணாறுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இதன் காரணமாக எந்த நேரமும் தளி சாலை வாகன நெருக்கத்துடன் பரபரப்பாக காணப்படும். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்:-

    உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் தளி சாலையின் பங்கு முக்கியமானதாகும்.இதன் வழியாக சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். இந்த சாலையின் குறுக்காக செல்கின்ற ரயில் பாதையின் மீது கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது.அதற்கு முன்பு தளி சாலை ஒரு வழிப்பாதையாக இருந்தது.அப்போது பஸ் நிலையம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து வருகின்ற வாகனங்கள் ராஜேந்திரா சாலை வழியாக சென்று காந்தி சதுக்கத்தை அடைந்து திருமூர்த்திமலை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு சென்று விடும். அதே போன்று நகருக்குள் நுழையும் வாகனங்கள் தளி சாலை வழியாக வந்து பொள்ளாச்சி- பழனி நெடுஞ்சாலையை அடைந்து பஸ் நிலையத்துக்கு சென்று விடும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீராக இருந்து வந்தது. ஆனால் பாலம் கட்டப்பட்ட பின்பு ஒரு வழி சாலையாக இருந்த தளிசாலை இரு வழி சாலையாக மாறிவிட்டது. இதனால் வாகன பெருக்கமும் அதிகரித்து உள்ளது.அத்துடன் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் அதை செயல்படுத்த முன்வர வில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.எனவே தளி சாலையில் ஏற்பட்டு வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் அதன் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.அத்துடன் முன்பு இருந்தது போன்று ஒரு வழி பாதையாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×