என் மலர்
நீங்கள் தேடியது "textiles owner"
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியைச் சேர்ந்த பொன்னுத்தாய் (வயது 25), அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
முகவூரில் செயல்பட்டு வரும் பெண்கள் உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தில், கடந்த 3 ஆண்டுகளாக டெய்லராக பணியாற்றி வருகிறேன்.
அந்த நிறுவன உரிமையாளர் மணிமாறன் (28) என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பி நெருக்கமாக பழகினேன். இதனால் நான் கர்ப்பமானேன்.
இது தெரியவந்ததும் எனது பெற்றோர் சென்று மணிமாறணிடம் பேசினர். அப்போது திருமணம் செய்வதாக உறுதி அளித்தார். இதனை நாங்கள் நம்பினோம்.
இந்த நிலையில் மணிமாறன் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ராஜபாளை யம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருவத்தாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






