search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Trustee"

    • கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

     திருப்பூர்:

    இந்து சமய அறநிலையத்து றை கட்டுப்பாட்டில்உள்ள திருக்கோவில்களில் அறங்கா வலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 62நபர்களுக்கு உறுப்பினர்களுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    கலைஞரின் கனவை நனவாக்கும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தினையும், ஒருகாலப்பூ ஜை திட்டத்தின் கீழ் திருக்கோவி ல்களில்பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் திருக்கோவில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தினையும், திருக்கோவில் பணியாளர்க ளின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டத்தினையும், திருக்கோவில் புனரமைக்கும் திட்டத்தினையும் என எண்ணற்ற திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கிராமப்புறத்திருக்கோயில் திருப்பணி நிதியுதவித்தி ட்டத்தின் கீழ் திருக்கோயி ல்களின் திருப்பணிக்கு வருட ந்தோறும் அரசு நிதியுதவியாக ஒரு கோயிலுக்கு ரூ.2 லட்சம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 20 திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஒரு கோயிலுக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 20 திருக்கோ யில்களுக்கு ரூ.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதி திருக்கோயில்களின் திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 60 திருக்கோயில்களின் திருப்பணிக்காக ஒரு கோயிலுக்கு ரூ.2லட்சம் வீதம் மொத்தம் 60 திருக்கோயி ல்களுக்கு ரூ.120 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் அறங்கா வலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கான ஆணைகள் வழங்கப்ப டவுள்ளது. இன்றைய தினம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்உள்ள திருக்கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்க ளாக முதல்கட்டமாக நியமிக்க ப்பட்ட 62 நபர்களுக்கு உறுப்பி னர்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர்கள் (இந்து சமய அறநி லையத்துறை)செந்தில்குமார், முத்துராமன், கலைச்செல்வி, ஜெகநாதன்சாமி, திருப்பூ ர்மாநகராட்சி 4-ம் மண்டல த்தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் மாவட்ட அறங்காவலல் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வி கண்டிப்பாக சேர்க்கவேண்டும்
    • வழக்கின் விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    சென்னை:

    கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் விண்ணப்பிப்பவர்களுடைய அரசியல் சார்பு குறித்த கேள்வி இடம்பெறாதது குறித்து நீதிபதிகள் அறநிலையைத் துறைக்கு கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை தரப்பு வக்கீல், கடந்த விசாரணையின் போது, தெய்வ பக்தி கொண்டவர், அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன், அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வி கண்டிப்பாக சேர்க்கவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினர். மேலும் அறங்காவலர் தேர்வுக்காக மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 25-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    ×