search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilarasan"

    • தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'.
    • இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

    கனா, எஃப்ஐஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.



    இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் மேற்கொள்கிறார்.


    லப்பர் பந்து போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஆயுத பூஜையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.


    தமிழரசன் உறவினர்களிடம் கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து அவரது உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதித்தனர். #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் தடுத்ததால் மோதல் உண்டானது.

    அப்போது ஏற்பட்ட கலவரம் காரணமாக போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.

    இதில் சண்முகம் (38), செல்வசேகர் (42), கார்த்திக் (20), கந்தையா (58), காளியப்பன் (22), ஸ்னோலின் (17), தமிழரசன் (42) ஆகிய 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

    இந்த நிலையில் 7 பேரின் உடல்களையும் டெல்லி எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர் அல்லது திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தலைமையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில், தூத்துக்குடியை சேர்ந்த மருத்துவர்கள் மனோகரன், சுடலைமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர், நீதித்துறை நடுவர்கள் முன்னிலையில் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்தனர்.

    உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி இந்த பிரேத பரிசோதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 2 மணி வரை 7 பேரின் உடல்களும் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மீதமுள்ள 6 பேரின் உடல்க‌ளும் கோர்ட்டு உத்தரவுப்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

    பிரேத பரிசோதனை முடிந்த சண்முகம், கார்த்திக், செல்வசேகர் ஆகிய 3 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நேற்று காலை காளியப்பன், கந்தையா ஆகியோரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஸ்னோலின், தமிழரசன் ஆகியோரது உடல்களை பெற அவர்களது உறவினர்கள் மறுத்து விட்டார்.

    ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியிலிருந்து நிரந்தரமாக அகற்ற வேண்டும், இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமான போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ள‌னர்.

    ஸ்னோலின், தமிழரசன் உடலை அவர்களது உறவினர்கள் இன்று காலை வரை வாங்கவில்லை. இதையடுத்து அவர்களிடம் கலெக்டர் சந்தீப்நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா மற்றும் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தமிழரசன் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர்.

    இதைத்தொடர்ந்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தார். இதையடுத்து தமிழரசனின் உறவினர்களும் அங்கு வந்தார்கள். தொடர்ந்து தமிழரசனின் தாய் ராமலெட்சுமி அம்மாளிடம் அரசு அறிவித்த ரூ.20 லட்சம் உதவித்தொகைக்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து தமிழரசனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மறுபிரேத பரிசோதனை முடிந்த ஸ்னோலின் உடல் மட்டும் தொடர்ந்து பிணவறையில் பாதுகாக்கப்படுகிறது.

    மேலும் பிரேத பரிசோதனை செய்யப்படாத அந்தோணி செல்வராஜ், கிளாஸ்டன், ஜான்சி, மணிராஜ், ரஞ்சித் குமார், ஜெயராமன் ஆகிய 6 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஒரு வாரத்துக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  #ThoothukudiShooting
    ×