என் மலர்
நீங்கள் தேடியது "Tamil Nadu Disabled Cricketers"
- தமிழ்நாடு திரும்ப முடியாமல் வாரணாசி ரெயில் நிலையத்திலேயே மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகின்றனர்.
- தமிழ்நாடு வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்துவர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
வாரணாசி:
வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா அணி சார்பாக தமிழகத்திலிருந்து ஆறு வீரர்கள் மற்றும் அணி மேலாளர் கலந்து கொண்டுள்ளனர். போட்டி முடிந்த பிறகு தமிழகம் திரும்புவதற்காக கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதற்கு முன்பதிவு செய்துள்ளனர். ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரெயிலில் ஏற முடியவில்லை.
இதனால் தமிழ்நாடு திரும்ப முடியாமல் வாரணாசி ரெயில் நிலையத்திலேயே மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் தவித்து வருகின்றனர். கும்பமேளாவுக்கு செல்லும் கூட்டத்தால் தமிழ்நாடு வர முடியாத சூழலில் உள்ள தங்களை மாநில அரசு அழைத்துவர உதவுமாறு அணியின் கேப்டன் சச்சின் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் வாரணாசியில் தவிக்கும் தமிழ்நாடு வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்துவர தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்படி, ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டர்.
அதன்படி காசியில் சிக்கியுள்ள மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாரணசியில் இருந்து இன்று பகல் 1.30 மணிக்கு விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்து அங்கிருந்து சென்னைக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் அத்தியாவசிய செலவுக்காக தமிழக அரசு சார்பில் ரூ. 15 ஆயிரமும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.






