என் மலர்
நீங்கள் தேடியது "சிவாஜி கணேசன் பிறந்தநாள்"
- சிவாஜி கணேசன் "நடிகர் திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.
- நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா உலகில் நடிகர் திலகம் என அன்புடன் அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சிவாஜி கணேசன் முத்தமிழறிஞர் கலைஞரின் கதை வசனத்தில் உருவாகிய 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ்த் திரைப்பட உலகில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இந்தி, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
சிவாஜி கணேசன் "நடிகர் திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார்.
நடிகர் திலகத்தின் 98-வது பிறந்தநாள் இன்று திரையுலகினராலும், அவரது குடும்பத்தினராலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாளான இன்று சென்னை அடையாறு, தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் ஆகியோர் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
- நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு குடும்பத்தினர், திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தினர்.






