என் மலர்
நீங்கள் தேடியது "கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள்"
- திருட்டு மற்றும் ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்யலாம்.
- பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்குவதால் இது சக்திவாய்ந்த அபிஷேகமாக பார்க்கப்படுகிறது.
பைரவருக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய், மற்றும் பலவகையான பழச்சாறுகள் கொண்டு அபிஷேகம் செய்து பார்த்திருப்போம். ஆனால், கன்னிகைப்பேர் என்ற ஊரிலுள்ள சிவாநந்தீஸ்வரர் கோவில் பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
பைரவருக்கு எதற்காக மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்குவதாகவும் அதனால் இது சக்திவாய்ந்த அபிஷேகமாகவும் பார்க்கப்படுகிறது.
யார் யாரெல்லாம் இந்த அபிஷேகம் செய்யலாம் :
* பணம் மற்றும் தங்கம் முதலானவற்றை தொலைத்தவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், திருட்டு மற்றும் ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அபிஷேகத்தை மேற்கொள்ளலாம்.
* திருட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அபிஷேகத்தை செய்யும் போது, திருடியவர்கள் சட்டத்தின் முன் வந்து நிற்பார்கள் என்றும் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
* மிளகாய்ப் பொடியால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேறியவர்கள், பால் அபிஷேகம் செய்து பைரவரை குளிர்வித்து, பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும்.
சென்னை - பெரியபாளையம் சாலையில், 36 கி.மீ., துாரத்தில் உள்ளது, கன்னிகைப்பேர் என்ற கிராமம். இங்கிருந்து, 4 கி.மீ., தொலைவில் சிவாநந்தீஸ்வரர் கோவில் உள்ளது . திருவள்ளூரில் இருந்தும் பெரியபாளையம் வழியாகவும் இக்கோவிலுக்கு செல்லலாம்.

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த நாளில் பைரவரை வழிபட வேண்டும்:
* சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும், கடக ராசிக்காரர்கள் திங்கட் கிழமையிலும் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமையிலும் பைரவரை வழிபாடு செய்யலாம்.
* மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் புதன்கிழமையிலும், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் வியாழக்கிழமையிலும், ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்யலாம்.
* மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையிலும் பைரவரை வழிபாடு செய்ய நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.






