என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special pujas at the Kala Bhairav ​​Temple"

    தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. 
    காலை, கணபதி ஹோமம்,  நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம்,  காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதில், ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

    இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சிண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் சூரன் குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    ×