என் மலர்
நீங்கள் தேடியது "புனித செபஸ்தியார்"
- இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
- தினமும் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல்நாளான நாளை காலை 6 மணிக்கு மாடத்தட்டுவிளை பங்கில் பணியாற்றி மறைந்த அருட்பணியாளர்கள் மற்றும் பங்கிற்கு நிலம் தானமாக வழங்கியவர்களுக்கான நினைவு திருப்பலி, மாலை 6 மணிக்கு புனித செபஸ்தியாரின் ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு திருவிழா கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்ேதானிபாப்புசாமி தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். முட்டைக்காடு பங்குதந்தை மனோகியம் சேவியர், ஆலன்விளை பங்குதந்தை பிரைட் சிம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.இரவு 8.30 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.
விழாவில் 15-ந்தேதி காலை 6 மணிக்கு முளகுமூடு நாஞ்சில்பால் பதனிடும் நிலயை இயக்குனர் ஜெரால்டு ஜெஸ்டின் தலைமையில் குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குதல், 19-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர்பவனி, 20-ந்தேதி காலை 6 மணிக்கு புனித செபஸ்தியார் மறைசாட்சியாக உயிர்துறந்த தினத்தையொட்டி அருட்பணியாளர் மரிய ஆன்டணி தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.
அதைதொடர்ந்து புனித செபஸ்தியாரின் திருப்பண்டம்(எலும்புத்துண்டு) பக்தர்ளுக்கு முத்தமிடும் நிழ்ச்சி, பக்தர்கள் வணக்கத்திற்காக ஆலயத்தில் வைத்தல், 10 மணிக்கு வில்லுக்குறி வட்டார மனிதநேய கூட்டம், 11 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6 மணிக்கு ஆயர் இல்ல மறைமாவட்ட தொடர்பாளர் ஜேசுரெத்தினம் அடிகளார் தலைமையில் திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.
21-ந்தேதி காலை 6 மணிக்கு அன்னை வேளாங்கண்ணி கல்லூரி தாளாளர் ஜேசுமரியான் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலி நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆராதனை நிறைவேற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான 22-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் தீஸ்மாஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். பங்குதந்தை ஜோஸ்பிரசாத் மறையுரையாற்றுகிறார். காலை 8.30 மணிக்கு திருப்பலி, மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு கண்தானம் செய்தவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெயகுமார், இணை பங்குதந்தை ெசல்வகுமார் மற்றும் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பங்கு அருட்பணிபேரவையினர் செய்து வருகிறார்கள்.
- பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.
- ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மதுரை உயர் மறைமாவட்டம் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.
முட்டைக்காடு பங்குதந்தை மனோகியம் சேவியர், ஆலன்விளை பங்குதந்தை பிரைட் சிம்ராஜ், மாடத்தட்டுவிளை பங்குதந்தை ஜெயக்குமார், இணை பங்குதந்தை செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் எட்வின் சேவியர் செல்வின், செயலாளர் ராணி ஸ்டெல்லா பாய், துணைச் செயலாளர் ஜோஸ்வால்டின், பொருளாளர் லூக்காஸ் உள்பட ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
- திரளானவர்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு காணிக்கை செலுத்தினர்.
- இன்று திருப்பலி, அசன விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
வள்ளியூர் அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து வாண வேடிக்கை, புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு உப்பு, மிளகு காணிக்கை செலுத்தினர்.
10-ம் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீரும், கொடியிறக்கமும் நடைபெற்றது. விழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு வடக்கூர் புனித அந்தோணியார் கெபியில் ஜெபமாலை, திருப்பலி மற்றும் அசன விருந்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா அருள் செபஸ்தியான், பொருளாளர் மகான் அந்தோணி, செயலாளர் லியோ ஜெப நீலன், பங்கு தந்தை டென்ஸில் ராஜா, நிர்வாக பொறுப்பு தந்தை அருள்மணி, அருட்சகோதரிகள், முத்துலாபுரம் தூய செபஸ்தியார் திருத்தல நிர்வாகக்குழு இறை மக்கள் செய்து இருந்தனர்.
இதையடுத்து இரவு 7 மணியளவில் மலர்மாலைகள், தோரணங்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் செபஸ்தியார் மற்றும் மாதா சொரூபங்கள் பொருத்தப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. தேர் மேளதாளம், அதிர்வேட்டு, வாணவேடிக்கை முழங்க முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9 மணியளவில் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் தொடர்ச்சியாக நேற்று மாலை ஆலயத்தில் தென்னிலைப்பட்டி அருட்தந்தை கிறிஸ்துராஜா கலந்துகொண்டு கொடியிறக்கம் மற்றும் திருப்பலி நிறைவேற்றி வைத்தார். விழாவில் குமரபட்டி, பாத்திமாநகர், மேலபச்சகுடி, செவந்தியானிபட்டி, கொட்டப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, புனித செபஸ்தியார் அன்பியம் மற்றும் குமரபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.






