search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழாநாளை தொடங்குகிறது
    X

    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழாநாளை தொடங்குகிறது

    • இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    • தினமும் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.

    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல்நாளான நாளை காலை 6 மணிக்கு மாடத்தட்டுவிளை பங்கில் பணியாற்றி மறைந்த அருட்பணியாளர்கள் மற்றும் பங்கிற்கு நிலம் தானமாக வழங்கியவர்களுக்கான நினைவு திருப்பலி, மாலை 6 மணிக்கு புனித செபஸ்தியாரின் ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 7 மணிக்கு திருவிழா கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்ேதானிபாப்புசாமி தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். முட்டைக்காடு பங்குதந்தை மனோகியம் சேவியர், ஆலன்விளை பங்குதந்தை பிரைட் சிம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.இரவு 8.30 மணிக்கு கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.

    விழாவில் 15-ந்தேதி காலை 6 மணிக்கு முளகுமூடு நாஞ்சில்பால் பதனிடும் நிலயை இயக்குனர் ஜெரால்டு ஜெஸ்டின் தலைமையில் குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குதல், 19-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர்பவனி, 20-ந்தேதி காலை 6 மணிக்கு புனித செபஸ்தியார் மறைசாட்சியாக உயிர்துறந்த தினத்தையொட்டி அருட்பணியாளர் மரிய ஆன்டணி தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    அதைதொடர்ந்து புனித செபஸ்தியாரின் திருப்பண்டம்(எலும்புத்துண்டு) பக்தர்ளுக்கு முத்தமிடும் நிழ்ச்சி, பக்தர்கள் வணக்கத்திற்காக ஆலயத்தில் வைத்தல், 10 மணிக்கு வில்லுக்குறி வட்டார மனிதநேய கூட்டம், 11 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 6 மணிக்கு ஆயர் இல்ல மறைமாவட்ட தொடர்பாளர் ஜேசுரெத்தினம் அடிகளார் தலைமையில் திருப்பலி, இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    21-ந்தேதி காலை 6 மணிக்கு அன்னை வேளாங்கண்ணி கல்லூரி தாளாளர் ஜேசுமரியான் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலி நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆராதனை நிறைவேற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் நிறைவு நாளான 22-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் தீஸ்மாஸ் தலைமை தாங்கி ஆடம்பர கூட்டத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். பங்குதந்தை ஜோஸ்பிரசாத் மறையுரையாற்றுகிறார். காலை 8.30 மணிக்கு திருப்பலி, மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு கண்தானம் செய்தவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெயகுமார், இணை பங்குதந்தை ெசல்வகுமார் மற்றும் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பங்கு அருட்பணிபேரவையினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×