என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனா நிலநடுக்கம்"

    • மாகாண தலைநகரான லான்சோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையப்பகுதி இருந்தது.
    • எட்டு வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், 100- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. மொத்தம் 43 முறை அதிர்வுகள் பதிவிகின.

    சீனாவின் வடமேற்கில் உலா கான்சு மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுள்ளது.

    கான்சு மாகாணத்தில் லாங்ஸி மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது.

    மாகாண தலைநகரான லான்சோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையப்பகுதி இருந்தது.

    நிலநடுக்கத்தின் போது கட்டிட மேற்கூரை ஓடுகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் காயமடைந்தனர். 

    எட்டு வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், 100- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. சேதங்களை அப்புறப்படுத்தும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

    நிலநடுக்கத்தால் அண்டை மாவட்டங்களான சாங்சியான், வெயுவான், லிண்டாவோ, டிங்ஸி, வுசான், தியான்சுயி ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.

    மொத்தம் 43 முறை அதிர்வுகள் பதிவிகின. இதனால் பாதுகாப்பு குறித்து மக்கள் கவலையடத்துள்ளனர். 

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.
    • சீனாவை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியிலும் நள்ளிரவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

    சீனா:

    சீனாவின் ஜின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் நேற்றிரவு 11.39 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சீனாவை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியிலும் நள்ளிரவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி என்சிஆர் பகுதியில் இரவு 11.45 முதல் 12 மணிக்குள் மக்கள் கடும் அதிர்வை உணர்ந்துள்ளனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக டெல்லியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பெய்ஜிங்:

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீஜிங், தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரித்தது. பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகி உள்ளது. 17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த 3 நிமிடங்களுக்குப் பிறகு, யானிலும் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சீனாவின் அடுத்தடுத்த ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

    மேலும் பதினான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பாக்சிங் கவுண்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சில வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 1,400க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் சிச்சுவான் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தண்டவாளத்தின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தென்மேற்கு ரெயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.

    ×