என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 184720"

    பணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால் பேரூராட்சி ஊழியர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
    வடமதுரை அண்ணாநகரை சேர்ந்த ராமர் என்பவர் கோரிக்கை மனுவுடன் வந்தார். அவர் தெரிவிக்கையில் கடந்த 8 வருடமாக வடமதுரை பேரூராட்சியில் வேலை பார்த்து வந்தேன்.

    ஆனால் தற்போது கடந்த மே மாதம் முதல் வேலை இல்லை என கூறிவிட்டனர். எந்தவித காரணமும் கூறாமல் என்னை வேலையை விட்டு நீக்கியதால் என் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து நான் பலமுறை கேட்டபோதும் அனைவரும் ஒன்றுசேர்ந்தது போல நீ வேலைக்கு வேண்டாம் என கூறிவிட்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் வேலைக்கே வராமல் பலர் சம்பளம் பெற்று வருகின்றனர். வறுமையில் வாடும் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எனக்கு பணி வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

    நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் உள்ள பொதுமக்கள் அளித்த மனுவில்,  பூ மார்க்கெட் எதிர்புறம் ேஷர்ஆட்டோ மற்றும் லோடு வாகனங்கள் நிறுத்தி உள்ளனர். தற்போது அப்பகுதியில் மரக்கடைகளுக்கு வரும் கனரக வாகனங்களும் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே இதனை சரிசெய்யவேண்டும் என தெரிவித்தனர்.

    குரும்பபட்டி ஊராட்சி ஒன்றியம் மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்தமனுவில் எங்கள் ஊருக்கு பாதை வசதி இல்லை. ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளது.

    இதனால் 6 கி.மீ தூரம் சுற்றிவர வேண்டியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவரிடம் நேரிலும், கடிதம் மூலம் தெரிவித்தும், கிராம சவை கூட்டத்தில் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றனர்.
    பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி தொடர்பாக வங்கியின் முன்னாள் இயக்குனர் உஷா அனந்தசுப்பிரமணியத்தை பணிநீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. #PNBFraud #UshaAnanthasubramanian
    புதுடெல்லி:

    மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இந்த வங்கியில் 2015 ஆகஸ்டு முதல் 2017 மே வரையிலான காலகட்டத்தில் 2 முறை நிர்வாக இயக்குனாக இருந்தவர் உஷா அனந்தசுப்பிரமணியன். பின்னர் இவர் அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்தார்.



    பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனராக உஷா அனந்தசுப்பிரமணியன் பதவியில் இருந்தபோது தான், நிரவ் மோடியின் கடன் மோசடி நடந்தது. எனவே இந்த மோசடி தொடர்பாக உஷா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டதால் அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன் அவர் விலகினார். எனினும் ஒரு சாதாரண ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற இருந்தார்.

    ஆனால் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி தொடர்பாக அவரை மத்திய அரசு நேற்று பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.  #PNBFraud #UshaAnanthasubramanian #Tamilnews
    பிரபல கியூபா புரட்சியாளர் சே குவேராவின் டீ-ஷர்ட் அணிந்திருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். #CheGuevarajersey #USmilitaryacademy #Cadetexpelled #SpenserRapone

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பாய்ண்ட் ராணுவ பயிற்சி மையத்தில் ஸ்பென்சர் ரபோன்(26) என்ற வீரர் பயிற்சி பெற்று வந்தார். 

    கடந்த திங்கள்கிழமை, தனது ராணுவ பயிற்சியை முடித்த ஸ்பென்சர் ரபோன், கம்யூனிசத்துக்கு ஆதரவான புகைப்படங்களை பகிர்ந்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அந்த புகைப்படத்தில், தனது ராணுவ உடைக்குள் ஸ்பென்சர் அணிந்திருந்த டீ-ஷர்ட்டில், சே குவேராவின் படம் இடம்பெற்றிருந்தது. 



    இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவரை ராணுவத்திலிருந்து நீக்கி அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

    இதற்கு சற்றும் வருத்தப்படாத ஸ்பென்சர் ரபோன், ஃபோர்ட் டிரம் ராணுவ குடியிருப்பின் முன்நின்று, தன் கையின் நடுவிரலை உயர்த்தி படமெடுத்ததுடன், 'ஒன் ஃபைனல் சல்யூட்' என்று தலைப்பிட்டு அதை இணையதளங்களில் பகிர்ந்துள்ளார். 

    ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு, வெஸ்ட் பாய்ண்ட் மையத்தில் ராணுவ பயிற்சியை முடித்த ஸ்பென்சர், தனது தொப்பியின் உள்பகுதியில் 'கம்யூனிசம் வெற்றிபெறும்' என எழுதி அந்த படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். 



    தன்னை ஒரு புரட்சிகர சோசியலிசவாதி’ என்று கூறும் ஸ்பென்சர் ரபோன், அடுத்த மாதம் சிகாகோ நகரில் நடைபெற உள்ள 'சோசியலிசம் 2018' மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.#CheGuevarajersey #USmilitaryacademy #Cadetexpelled #SpenserRapone
    ×