search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

    பணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால் பேரூராட்சி ஊழியர் கலெக்டரிடம் மனு

    பணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால் பேரூராட்சி ஊழியர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
    வடமதுரை அண்ணாநகரை சேர்ந்த ராமர் என்பவர் கோரிக்கை மனுவுடன் வந்தார். அவர் தெரிவிக்கையில் கடந்த 8 வருடமாக வடமதுரை பேரூராட்சியில் வேலை பார்த்து வந்தேன்.

    ஆனால் தற்போது கடந்த மே மாதம் முதல் வேலை இல்லை என கூறிவிட்டனர். எந்தவித காரணமும் கூறாமல் என்னை வேலையை விட்டு நீக்கியதால் என் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து நான் பலமுறை கேட்டபோதும் அனைவரும் ஒன்றுசேர்ந்தது போல நீ வேலைக்கு வேண்டாம் என கூறிவிட்டனர். பேரூராட்சி அலுவலகத்தில் வேலைக்கே வராமல் பலர் சம்பளம் பெற்று வருகின்றனர். வறுமையில் வாடும் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டனர். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எனக்கு பணி வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

    நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் உள்ள பொதுமக்கள் அளித்த மனுவில்,  பூ மார்க்கெட் எதிர்புறம் ேஷர்ஆட்டோ மற்றும் லோடு வாகனங்கள் நிறுத்தி உள்ளனர். தற்போது அப்பகுதியில் மரக்கடைகளுக்கு வரும் கனரக வாகனங்களும் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே இதனை சரிசெய்யவேண்டும் என தெரிவித்தனர்.

    குரும்பபட்டி ஊராட்சி ஒன்றியம் மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அளித்தமனுவில் எங்கள் ஊருக்கு பாதை வசதி இல்லை. ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளது.

    இதனால் 6 கி.மீ தூரம் சுற்றிவர வேண்டியுள்ளது. ஊராட்சி மன்ற தலைவரிடம் நேரிலும், கடிதம் மூலம் தெரிவித்தும், கிராம சவை கூட்டத்தில் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு பாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்றனர்.
    Next Story
    ×