என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 168674"

    இந்தியா எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்: 

    பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி  ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது. 

    இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 179 ரூபாய் 86 காசுகளாக விற்பனையாகிறது.   

    டீசல் ஒரு லிட்டர் 174 ரூபாய் 15 காசுகளாக உயர்ந்துள்ளது. மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டர் 155 ரூபாய் 56 காசுகளாக உள்ளது.

    இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்றார். விலை உயர்த்தப்பட்ட பிறகும், நாங்கள் டீசலுக்கு லிட்டருக்கு 56 ரூபாய் இழப்பை சந்திக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை ஆளும்  மோசடி கும்பலால் நாடு பெரும் பணவீக்கத்தை சந்திக்கும் என்று அவர் எச்சரித்தார்.

    ரஷிவுடன் 30 சதவீத மலிவான விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை தமது அரசு மேற்கொண்டதாகவும், ஆனால் ஷபாஸ் ஷெரீப் அரசு அதை தொடரவில்லை என்றும் கூறினார்.  

    ஆனால் அமெரிக்காவின் கூட்டாளியான இந்தியா,  ரஷியாவிடம் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணையை வாங்குவதன் மூலம்  எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இந்தியா அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்தது துரதிஷ்டவசமான செயல் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi
    இஸ்லாமாபாத் :

    தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. எனினும் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது.

    ஆனால் இதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்போதெல்லாம், பாகிஸ்தான் ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. குறிப்பாக பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் சமீபத்திய ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்களால் இரு நாட்டு அமைதி பேச்சுவார்த்தை தடைபட்டு உள்ளது.

    அது மட்டுமின்றி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்ததும், காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களும் பேச்சுவார்த்தைக்கான சூழலை முற்றிலும் முடக்கி இருக்கிறது.

    இந்த சூழலில் சமீபத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், ஐநா பொதுச்சபை கூட்டத்தின் ஒரு அங்கமாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் - பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் சந்தித்துப் பேச உள்ளதாக தெரிவித்தார்.
     
    இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் மூன்று போலீஸ் அதிகாரிகளை பயங்கரவாதிகள் கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்ததாலும், பயங்கரவாதி புர்ஹான் வானிக்கு பாகிஸ்தான் அஞ்சல் தலை வெளியிட்டதாலும் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரங்களில் பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்ததது.

    இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது துரதிஷ்டவசமானது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :-

    நேர்மறையான நடவடிக்கையை இந்தியா முன்னெடுக்காதது துரதிஷ்டவசமானது. இருநாடுகளுக்கு இடையே அமைதியை உருவாக்குவதற்கு  கிடைத்த வாய்ப்பை மேலும் ஒரு முறை இந்தியா வீணடித்துவிட்டது. 

    அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்நாட்டு அழுத்தம் காரணமாக அமைதி பேச்சுவார்த்தையை  இந்தியா ரத்து செய்துள்ளதாக தெரிகிறது.

    இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய பாதுகாப்புப்படை வீரரை பாகிஸ்தான் ராணுவம் துன்புறுத்தி கொன்றதாக இந்தியா கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அது இந்திய அதிகாரிகளின் உள்நோக்கம் கொண்ட தீங்கிழைக்கும் பிரச்சாரமாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #IndPakTalks #MEA #SushmaSwaraj #ShahMehmoodQureshi
    ×