search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suzuki V Storm 650 XT"

    சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #SUZUKI



    சுசுகி நிறுவனம் ஒருவழியாக தனது மிடில்வெயிட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

    சுசுகி வி-ஸ்டாம் 650 XT மோட்டார்சைக்கிள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என கூறப்பட்ட நிலையில், இதன் வெளியீடு சற்றே தாமதமாகி இருக்கிறது. இந்தியாவில் புதிய வி ஸ்டாம் XT விலை ரூ.7.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    வி ஸ்டாம் தோற்றம் பார்க்க முந்தைய வி ஸ்டாம் 1000 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. வி ஸ்டாம் 1000 மாடலில் இருப்பதை போன்றே அட்வென்ச்சர் ஃபேரிங் மற்றும் ஹெட்லைட்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் பயனர் விருப்பப்படி மாற்றிக் கொள்ளக்கூடிய வின்ட்ஷீல்டு வழங்கப்பட்டுள்ளது.

    சுசுகி வி ஸ்டாம் 650 XT மாடலில் அலுமினியம் ஸ்போக் சக்கரங்கள், டியூப்லெஸ் பேட்லேக்ஸ் அட்வென்ச்சர் ஏ40 டியூப்லெஸ் டையர்கள், ஹேன்ட் கார்டுகள் மற்றும் இன்ஜின் கவுல் வழங்கப்பட்டுள்ளது. புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் 12 வாட் டிசி சார்ஜிங் போர்ட் ஸ்டான்டர்டு அம்சமாக கொண்டுள்ளது.



    இந்த மோட்டார்சைக்கிள் 650சிசி லிக்விட்-கூல்டு வி-ட்வின் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 71 பி.ஹெச்.பி. @8800 ஆர்.பி.எம். செயல்திறன், 62 என்.எம். டார்கியூ @6500 ஆர்.பி.எம். மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இதில் மூன்று வகையில் மாற்றிக் கொள்ளக்கூடிய டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் முன்பக்கம் 43எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், மாற்றக்கூடி ரீபவுன்ட் உடனும் பின்புறம் பிரீலோடு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரேக்கிங் அம்சங்கள் பின்புறம் 260 எம்.எம். டிஸ்க், முன்பக்கம் 310 எம்.எம். டூயல் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏ.பி.எஸ்.) ஸ்டான்டர்டு அம்சமாக இருக்கிறது.

    சுசுகி வி ஸ்டாம் 650 XT சேம்பியன் எல்லோ மற்றும் பியல் வைட் கிளேசியர் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டு இருக்கும் நிலையில், விநியோகம் சில வாரங்களில் துவங்கும் என தெரிகிறது.
    சுசுகி நிறுவனத்தின் வி-ஸ்டாம் 650 XT மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #SUZUKI


    சுசுகி நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரம் இணையத்தில் லீக் ஆகியுளஅளது. சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டரை சமீபத்தில் அறிமுகம் செய்த சுசுகி அடுத்து வி-ஸ்டாம் 650 XT மோட்டார்சைக்கிளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சுசுகி வி-ஸ்டாம் 650 XT செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய சுசுகி வி-ஸ்டாம் 650 XT இந்திய விலை ரூ.7.75 முதல் ரூ.8.0 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சுசுகி வி-ஸ்டாம் 650 XT மாடல் கவாசகி வெர்சிஸ் 650 மற்றும் பென்லி TNT 600 GT உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்டதால் சுசுகி GSX-S750 விலை வெகுவாக குறைக்க முடிந்தது. இதே வழிமுறையை சுசுகி தனது 650 XT மாடலுக்கும் பின்பற்ற இருக்கிறது. ஹயபூசா மற்றும் GSX-S750 மாடல்களைத் தொடர்ந்து உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் மூன்றாவது மோட்டார்சைக்கிளாக சுசுகி வி-ஸ்டாம் 650 XT இருக்கிறது. 

    முதற்கட்டமாக இன்டர்மோட் 2016 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சுசுகி வி-ஸ்டாம் 650 XT இந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகமானது. வி-ஸ்டாம் 650 XT மாடலின் முன்பக்கம் 19 இன்ச் மற்றும் பின்புறம் 17 இன்ச் ஸ்போக் வீல் கொண்டிருக்கிறது. 

    சுசுகி வி-ஸ்டாம் 650 XT மாடலில் 650சிசி வி-ட்வின் இன்ஜின் வழங்கப்படுகிறது. இதே இன்ஜின் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் வி-ஸ்டாம் 650 XT மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய மாடலின் ஸ்டைலிங் பெரிய வி-ஸ்டாம் 1000 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. #SUZUKI #motorcycle
    ×