search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sushil Modi"

    சத்ருகன்சின்கா அரசியலை விட்டு விலகுவது நல்லது என்று பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி கூறி உள்ளார். #LSPolls #ShatrughanSinha
    பாட்னா:

    பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சத்ருகன்சின்கா எம்.பி.யாக தேர்வானார்.

    ஆனால் அதன் பிறகு அவருக்கும், பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. குறிப்பாக பிரதமர் மோடியை அவர் மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சத்ருகன்சின்கா பெயர் மீண்டும் இடம் பெறவில்லை. அவருக்கு பதில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பாட்னா தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நடிகர் சத்ருகன்சின்கா காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சத்ருகன்சின்காவை பீகார் மாநில காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் சத்ருகன்சின்கா தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில் சத்ருகன்சின்காவை கிண்டல் செய்து பீகார் துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    நடிகர் சத்ருகன் சின்கா அரசியலில் உச்சத்துக்கு வந்ததே பா.ஜனதாவை வைத்துதான். ஆனால் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது போல பா.ஜனதாவை மிக கடுமையாக சத்ருகன் சின்கா சேதப்படுத்தி விட்டார். கட்சிக்கு அவர் அப்படி துரோகம் செய்திருக்கக்கூடாது.

    மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கை போய் விட்டது. அதோடு அவருக்கு வயதும் அதிகரித்து விட்டது. எனவே சத்ருகன்சின்கா உடனடியாக அரசியலை விட்டு விலகி செல்வது நல்லது.

    பாட்னா தொகுதியில் அவர் களம் இறங்கினால் அவருக்கு ஆதரவாக பூத் ஏஜெண்டுக்கு கூட ஆள் கிடைக்காது. பாட்னா பா.ஜனதாவின் கோட்டையாகும். அங்கு சத்ருகன்சின்காவின் சித்து வேலைகள் எடுபடாது.
     
    இவ்வாறு சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். #LSPolls #ShatrughanSinha
    ஜி.எஸ்.டி.யில் கொண்டு வந்தாலும் பெட்ரோல் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று பா.ஜனதா துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி கூறியுள்ளார். #Petrol #Diesel #SushilModi

    பாட்னா:

    பீகார் பா.ஜனதா துணை முதல்-மந்திரியும், ஜி.எஸ்.டி. குழுவின் தலைவரான சுஷில் குமார் மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்தாலும் விலையில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இருக்காது.

    ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் என்று கருதுவது தவறானது. சிறிய அளவில் மட்டுமே மாற்றம் இருக்கும்.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் உள்ள மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரையறுக்கப்பட்ட அதிக பட்ச வரியைவிட கூடுதல் வரி வசூலிப்பது இயல்பான ஒன்றுதான். இது உலகம் முழுவதும் பின்பற்றப்படும் நடைமுறைதான்.


    பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வருவதற்கான இறுதி முடிவு ஜி.எஸ்.டி. கவுன்சிலால் எடுக்கப்படும்.

    ஜி.எஸ்.டி. அமைப்பு உறுதிபடும் வரை பெட்ரோலிய பொருட்களை வரம்புக்குள் கொண்டு வருவதில்லை என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒருமனதாக முடிவு எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சுஷில் குமார் மோடி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். #Petrol #Diesel #SushilModi

    ×