என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Super Good Films"

    • விஷால் நடிக்கும் 35 -வது திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
    • இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார்.

    விஷால் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மத கஜ ராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து விஷால் அவரது 35-வது திரைப்படத்தில் நடிக்கிறார்.

    விஷால் நடிக்கும் 35 -வது திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் திரைப்படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்.

    படத்தை ஆர் பி சவுதிர்யின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசரை நாளை காலை 11.45 மணிக்கு வெளியிட இருக்கின்றனர்.

    நடிகர் விஜய் - ஜீவா இருவரும் நண்பன் படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், அடுத்த படத்தில் விஜய்யுடன் இணைவதை நடிகர் ஜீவா உறுதி செய்திருக்கிறார். #Vijay63 #Jiiva
    நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 படத்தில் நடித்து வருகிறார். அரசியல் பின்னணியில் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. 

    இந்த படத்தை முடித்த பிறகு, அடுத்ததாக விஜய் யாருடன் இணைவார் என்பது குறித்து இப்போதே விவாதம் துவங்கிவிட்ட நிலையில், மோகன் ராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்ட சில முன்னணி இயக்குநர்கள் பெயர்கள் அடிபடுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 

    தமிழ் சினிமாவில் அதிகமாக புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம் சூப்பர் குட். இந்த நிறுவனத்தின் அதிபர் சவுத்ரியின் மகன்கள் தான் நடிகர்கள் ஜீவாவும், ஜித்தன் ரமேசும். கடம்பன், மொட்ட சிவா கெட்ட சிவா படங்களுக்கு பிறகு படங்கள் எதுவும் தயாரிக்காமல் இருக்கும் இந்நிறுவனம், விரைவில் ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு பூஜை போட இருக்கிறது.



    மூன்றில் ஒன்று விஜய் நடிக்கும் படம். நிறுவனத்தின் நூறாவது படத்தை விஜய்யை வைத்து தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதை உறுதிப்படுத்தி இருக்கும் நடிகர் ஜீவா, அதில் தானும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறி இருக்கிறார். ஜீவா ஏற்கனவே விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்திருந்தார். அடுத்து சூப்பர் குட் தயாரிப்பில் விஜய் நடித்த ஜில்லா படத்திலும் ஆடி இருந்தார். #Vijay63 #Jiiva

    ×