Vishal 35: டைட்டில் டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

விஷால் நடிக்கும் 35 -வது திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது.இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார்.
Vishal 35: டைட்டில் டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!
Published on

விஷால் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மத கஜ ராஜா திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து விஷால் அவரது 35-வது திரைப்படத்தில் நடிக்கிறார்.

விஷால் நடிக்கும் 35 -வது திரைப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இப்படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு விஷால் திரைப்படத்திற்கு ஜிவி இசையமைக்கிறார்.

படத்தை ஆர் பி சவுதிர்யின் சூப்பர் குட் பிலிம் தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஞ்சலியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் டைட்டில் டீசரை நாளை காலை 11.45 மணிக்கு வெளியிட இருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com