என் மலர்
நீங்கள் தேடியது "Sunrisers"
- பிசிசிஐ நடத்தும் ஐ.பி.எல்லில் விளையாட பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
- அவர்கள் கடைசியாக 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடினர்.
புதுடெல்லி:
இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தொடர் மோதலுக்கு பின் பாகிஸ்தான் அணி வீரர்கள் பிசிசிஐ நடத்தும் ஐ.பி.எல்.லில் விளையாட தடை விதிக்கப்பட்டது. கடைசியாக 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய அவர்கள், அதன்பின் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில்லை.
இதற்கிடையே, ஐ.பி.எல். அணிகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் எஸ்ஏ டி20 தொடர் மற்றும் தி ஹண்டரட் தொடரிலும் அணிகளை நடத்தி வருகின்றனர். இந்த தொடர்களிலும் இதுவரை அணி உரிமையாளர்கள் பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் நிராகரித்து வந்தனர்.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி உரிமையாளரான காவ்யா மாறன் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அப்ரார் அகமதை ஏலத்தில் எடுத்துள்ளார்.
காவ்யா மாறன் பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததை எதிர்த்தும், ஆதரித்தும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப்
பதிவிட்டு வருகின்றனர். இதனால் காவ்யா மாறன் டிரென்டிங்காக இருந்தார்.
- மகளிருக்கான சார்லோட் எட்வர்ட்ஸ் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
- இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- சென்ட்ரல் ஸ்பார்க்ஸ் அணிகள் மோதின.
மகளிருக்கான சார்லோட் எட்வர்ட்ஸ் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றி விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- சென்ட்ரல் ஸ்பார்க்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்ட்ரல் ஸ்பார்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து விளையாடிய சென்டரல் ஸ்பார்க்ஸ் அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 142 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்த போது 16-வது ஓவரை ஸ்பார்க்ஸ் அணியின் ஜார்ஜ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்து நடுவரால் வைடு கொடுக்கப்பட்டது. அந்த பந்தை பேட்டர் விலகி சென்று அடிக்க முயற்சிப்பார். அது பேட்டில் படாமல் கீப்பரிடம் சென்றது.
உடனே நடுவர் அதற்கு வைடு கொடுப்பார். இதனை சற்று எதிர்பாராத பந்து வீச்சாளர் ஜார்ஜ் ஷாக்கானர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






