search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sundara Pandian"

    • தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.
    • இதில் சிறந்த கதாசிரியருக்கான விருதினை இயக்குனர் எஸ். ஆர். பிரபாகரன் பெற்றார்.

    தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (04-09-2022) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் விக்ரம், ஆர்யா, ஜீவா, சித்தார்த் உள்ளிட்ட முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விருதுகள் பெற்றனர். இதையடுத்து 'சுந்தரபாண்டியன்' படத்திற்காக சிறந்த கதாசிரியருக்கான விருதினை இயக்குனர் எஸ். ஆர். பிரபாகரன் பெற்றார்.

    பின் அவர் பேசியதாவது, "சுந்தர பாண்டியன் படத்திற்கு மாநில விருது கிடைத்திருக்கிறது. சிறந்த படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. காலதாமதமானலும் விருது பெற்றத்தில் மகிழ்ச்சி. சுந்தர பாண்டியன் படத்திற்கு கதை எழுதும் போது விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து எழுதவில்லை. படம் மிகவும் யதார்த்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் மட்டுமே படத்திற்கு கதை அமைத்தேன்.


    எஸ். ஆர். பிரபாகரன் 

    சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமார் அவர்களுக்கு இணை இயக்குனராக இருந்தேன். சசிகுமார் சாரும் மிகவும் யதார்த்தமான பாணியில் கதையமைக்கக் கூடியவர். சசிகுமார் சார் "சுந்தர பாண்டியன்"படத்தை தயாரித்து நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. சிறந்த வில்லனுக்கான விருதை விஜய் சேதுபதி பெற்றிருக்கிறார்.

    ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த அவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அவர் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைத்துப் படமும் ஹிட் அடித்து வருகிறது. அதற்கான பிள்ளையார் சுழி "சுந்தர பாண்டியன்" படத்திலிருந்து போடபட்டது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.


    டெக்னாலஜி ரசிகர்களின் கையில் வந்து விட்டது, ஓடிடியில் தான் பெரும்பாலான மக்கள் தற்போது படங்களை பார்த்து வருகின்றனர். பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே திரையரங்கு என்றிருக்கிறது. இரண்டையும் ஆரோக்கியமான விஷயமாகத் தான் பார்க்கிறேன். தொடர்ந்து நல்ல கதைகளை கொண்டு வரும் இளம் இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்கும் திட்டம் இருக்கிறது.

    நடிப்பதற்கு நண்பர்கள் பலரும் என்னை அழைக்கிறார்கள். ஆனால், எனக்கு நடிப்பின் மேல் ஆர்வம் இல்லை. இயக்குனராக நல்ல கதைகளை வழங்கவேண்டும் என்று மட்டும் தான் எண்ணம் இருக்கிறது" இவ்வாறு அவர் பேசினார்.

    சுந்தரபாண்டியன் படத்தில் விஜய்சேதுபதியை வில்லனாக நடித்த வைத்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், அவருடைய அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் என்று கூறியிருக்கிறார். #VijaySethupathi
    ‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

    2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இதில் விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. தற்போது விஜய் சேதுபதி முன்னணி நடிகராக இருக்கிறார். விஜய் சேதுபதி குறித்து இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் மாலைமலருக்கு அளித்த பேட்டியில், ‘விஜய் சேதுபதி என்னுடைய நண்பர். அவரது ஆரம்ப காலத்தில் இருந்து அவருடன் பழகி வருகிறேன். அவருடைய வளர்ச்சியை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

    திரையுலகில் எந்த பின்புலமும் இல்லாமல் முன்னேறி வருகிறார். அவருடைய வளர்ச்சி அவரையே சார்ந்தது. சினிமாவில் நிறைய அரசியல் இருக்கிறது. அதையெல்லாம் கடந்து ஹீரோவாக இருக்கிறார். நிறைய ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். திறமையானவர். ரசிகர்களை தக்கவைத்து வருகிறார். 

    விஜய் சேதுபதியும் நானும் இணைந்து படம் உருவாக்க திட்டமிட்டோம். வரிசையாக அவர் வேறு படங்களில் நடித்து வந்ததால் நான் தொந்தரவு செய்யவில்லை. நல்ல உயரத்திற்கு விஜய் சேதுபதி சென்று கொண்டிருக்கிறார். அவருடைய அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன்’ என்றார்.

    எஸ்.ஆர்.பிரபாகரன் தற்போது சசிகுமாரை வைத்து ‘கொம்பு வச்ச சிங்கடா’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதன் மோஷன் போஸ்டரை நடிகர் சூர்யா இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×