search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sudarshana chakra"

    • சுதர்சன சக்கரம் கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும்.
    • விஷ்ணு ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார்.

    கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது அதன் ஆற்றல் அளவிட முடியாதது. சுதர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் 'சக்ரா' என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது.

    சாதாரணமாக 'சுதர்சன சக்கரம்' கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும் ஆனால். விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார்.

    எதிரிகளை அழித்த பின் சுதர்சனசக்கரம் மறுபடியும் அதன்இடத்திற்கே திரும்பி விடுகிறது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது.

    எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது.

    ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்தின் வேகம் அதிகரிக்கிறது. இதை 'ரன்சகதி' என்பர்.

    சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை. அதனுடைய உருவம், வடிவம் எத்தகையது என்றால். சின்னஞ்சிறு துளசி தளத்தில் அடங்கக்கூடியது. அதே சமயம் இப்பிரபஞ்சம் அளவு பரந்து விரிந்தது.

    திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் கோவிலில் நாளை சுதர்சன ஹோமம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.
    மதுரையை அடுத்த திருமோகூரில் உள்ள காளமேகப்பெருமாள் கோவில் வளாகத்தில் சக்கரத்தாழ்வார் கோவில் உள்ளது. தென்மாவட்ட அளவில் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இந்தநிலையில் சக்கரத்தாழ்வார் கோவிலில் சுதர்சன ஹோமம் 30-வது ஆண்டு விழா மற்றும் திருமஞ்சனம், திவ்ய நாம பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாளை (ஞாயிற்றுக் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை அனுக்ஞை, புண்யாக வாசனம், கும்ப பூஜை தொடங்கி நடைபெறும்.

    தொடர்ந்து 10.30 மணிக்கு சுதர்சன ஹோமம் நடைபெறும். அதனுடையே நரசிம்மர் ஹோமமும், சக்த ஹோமமும் நடைபெற உள்ளது. இதையடுத்து மதியம் 1.30 மணி முதல் 2 மணி வரை சுதர்சன ஹோம பூர்ணாகுதி அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருவாராதனம் நடைபெற இருக்கிறது. விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    திருமால்பூர் சென்று வணங்கி வழிபட்டபின், சக்கரத்தாழ்வார் வழிபாட்டினை இருபத்தேழு நாட்கள் செய்தால் வாழ்வில் நலம் பல பெறுவார்கள்.
    காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் - திருத்தணி செல்லும் சாலையில் திருமால் பூர் ஊர் இருக்கின்றது.

    இறைவனை நோக்கி, திருமாலானவர் ஆயிரத் தெட்டு நாட்கள் பூஜிக்க விரும்பினார். அதற்கான பொருத்தமான இடம் தேடி, இறைவனைப் பூஜித்த இடம் திருமால்பூர் ஆகும். தினம், திருக்குளத்தில் நீராடி, தினம் ஒரு தாமரை மலரைக் கொண்டு பூஜித்து வந்தார். தன் மீது, உண்மை பக்தி கொண்டு பூஜிக்கின்றாரா என்று சோதிக்க விரும்பிய சிவபெருமான், திருமால் கொய்து வந்த ஆயிரத்தெட்டாம் மலரைக் காணாமல் செய்து விட்டார்.

    பூஜை வேளையில் , பூஜிக்க வேண்டிய மலர் காணாமல் போக, கண நேரமும் தாமதியாது, திருமால் தன் கண்களையே தாமரை மலராக எண்ணி, ஒரு கண்ணை எடுத்து பூஜித்தார்.

    தரிசனமளித்த இறைவன், திரும்ப கண்களை அளித்தார். தாமரை மணாளனுக்கு, கமலக் கண்ணன் எனும் திருப்பெயரையும் வழங்கி, தன்னிடம் சக்கராயுதம் பெறவே, இப்பூஜை என்பதனை உணர்ந்து சக்கராயுதம் எனப்படும் சுதர்சன சக்கரத்தை வழங்கினார்.

    இந்த ஆலயத்து இறைவனை வழிபட, இருபத்தேழு நட்சத்திரக் காரர்களால், பட வேண்டிய துன்பங்கள் கொடூரமானதாக இல்லாமல், களைந்தெறியும் சிறப்புமிக்க ஆலயம் எதிரியால் மிகவும் துன்பப்படுவோரும், கண் கலங்கி எதிரியை வெல்ல முடியாமல் அவதியுறுவோரும், இந்த ஆலயத்துக்கு வந்து பரிகார பூஜித்தால், நலம் பெறுவார்கள்.

    தேங்காய் , ஆறு வாழைப் பழம், ஊது வத்தி, மஞ்சள் சாமந்திப் பூ-முல்லைப் பூ கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு, இறைவனை வணங்கும் திருமாலிற்கும் அர்ச்சனை செய்தல் வேண்டும். அதன் பின்பாக, திருமாலின் முன்பாக உள்ள நந்திகேசுவரரின் முன்பாக, ஒன்பது நெய் தீபங்களை, ஒரு நெய் அகல் தீபங்கொண்டு ஏற்றி, ஒருவரையும் இனி எதிரியாய் நினைத்து கெடுதல் மறந்தும் செய்ய மாட்டேன்.

    எந்த எதிரியும், என் சொல்லாலும், செயலாலும், புதியதாக உருவாகாமலும், உருவாக்கிக் கொண்ட எதிரியாலும் துன்பம் நேராதிருக்க அருள வேண்டுமென்ற கோரிக்கை வைக்க வேண்டும். திருமால்பூர் சென்று வணங்கி வழிபட்டபின், சக்கரத்தாழ்வார் வழிபாட்டினை இருபத்தேழு நாட்கள் செய்தால் வாழ்வில் நலம் பல பெறுவார்கள். 
    ×