search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமால்பூரில் கிடைத்த சுதர்சன சக்கரம்
    X

    திருமால்பூரில் கிடைத்த சுதர்சன சக்கரம்

    திருமால்பூர் சென்று வணங்கி வழிபட்டபின், சக்கரத்தாழ்வார் வழிபாட்டினை இருபத்தேழு நாட்கள் செய்தால் வாழ்வில் நலம் பல பெறுவார்கள்.
    காஞ்சீபுரத்தில் இருந்து அரக்கோணம் - திருத்தணி செல்லும் சாலையில் திருமால் பூர் ஊர் இருக்கின்றது.

    இறைவனை நோக்கி, திருமாலானவர் ஆயிரத் தெட்டு நாட்கள் பூஜிக்க விரும்பினார். அதற்கான பொருத்தமான இடம் தேடி, இறைவனைப் பூஜித்த இடம் திருமால்பூர் ஆகும். தினம், திருக்குளத்தில் நீராடி, தினம் ஒரு தாமரை மலரைக் கொண்டு பூஜித்து வந்தார். தன் மீது, உண்மை பக்தி கொண்டு பூஜிக்கின்றாரா என்று சோதிக்க விரும்பிய சிவபெருமான், திருமால் கொய்து வந்த ஆயிரத்தெட்டாம் மலரைக் காணாமல் செய்து விட்டார்.

    பூஜை வேளையில் , பூஜிக்க வேண்டிய மலர் காணாமல் போக, கண நேரமும் தாமதியாது, திருமால் தன் கண்களையே தாமரை மலராக எண்ணி, ஒரு கண்ணை எடுத்து பூஜித்தார்.

    தரிசனமளித்த இறைவன், திரும்ப கண்களை அளித்தார். தாமரை மணாளனுக்கு, கமலக் கண்ணன் எனும் திருப்பெயரையும் வழங்கி, தன்னிடம் சக்கராயுதம் பெறவே, இப்பூஜை என்பதனை உணர்ந்து சக்கராயுதம் எனப்படும் சுதர்சன சக்கரத்தை வழங்கினார்.

    இந்த ஆலயத்து இறைவனை வழிபட, இருபத்தேழு நட்சத்திரக் காரர்களால், பட வேண்டிய துன்பங்கள் கொடூரமானதாக இல்லாமல், களைந்தெறியும் சிறப்புமிக்க ஆலயம் எதிரியால் மிகவும் துன்பப்படுவோரும், கண் கலங்கி எதிரியை வெல்ல முடியாமல் அவதியுறுவோரும், இந்த ஆலயத்துக்கு வந்து பரிகார பூஜித்தால், நலம் பெறுவார்கள்.

    தேங்காய் , ஆறு வாழைப் பழம், ஊது வத்தி, மஞ்சள் சாமந்திப் பூ-முல்லைப் பூ கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு, இறைவனை வணங்கும் திருமாலிற்கும் அர்ச்சனை செய்தல் வேண்டும். அதன் பின்பாக, திருமாலின் முன்பாக உள்ள நந்திகேசுவரரின் முன்பாக, ஒன்பது நெய் தீபங்களை, ஒரு நெய் அகல் தீபங்கொண்டு ஏற்றி, ஒருவரையும் இனி எதிரியாய் நினைத்து கெடுதல் மறந்தும் செய்ய மாட்டேன்.

    எந்த எதிரியும், என் சொல்லாலும், செயலாலும், புதியதாக உருவாகாமலும், உருவாக்கிக் கொண்ட எதிரியாலும் துன்பம் நேராதிருக்க அருள வேண்டுமென்ற கோரிக்கை வைக்க வேண்டும். திருமால்பூர் சென்று வணங்கி வழிபட்டபின், சக்கரத்தாழ்வார் வழிபாட்டினை இருபத்தேழு நாட்கள் செய்தால் வாழ்வில் நலம் பல பெறுவார்கள். 
    Next Story
    ×