search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students Harassment"

    ஒட்டன்சத்திரத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தும்மிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மாணவிகளுக்கு உடற்பயிற்சி வகுப்பு எடுக்கும்போது பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

    இது குறித்து மாணவிகள் பல முறை கூறியும் கேட்காததால் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் ஸ்டீபன், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தச் சென்றனர். போலீசார் தேடி வருவதை அறிந்ததும் அவர் தப்பி ஓடி விட்டார்.

    ஆசிரியர் ராஜேசின் மனைவி சந்தியாவும், அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவரையும் பள்ளிக்கு வர வேண்டாம் என நிர்வாகம் அறிவித்தது.



    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல்தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த அக்காள், தங்கை முறையே 8ம் வகுப்பு, 6ம் வகுப்பு படித்து வருகிறார்கள். அந்த மாணவிகளுக்கு அந்த பள்ளியில் கைத்தொழில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜ்குமார் முத்துப் பாண்டி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசி விசாரணை நடத்தினார். விசாரணையில் ஆசிரியர் ராஜ்குமார் முத்துப்பாண்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஆசிரியர் ராஜ்குமார் முத்துப்பாண்டி மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×